எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Source: provided
சென்னை மக்களுடன் முதல்வர் திட்டத்தின் 2வது கட்டம் வரும் ஜூலை மாதம் தொடங்கவுள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.
தி.மு.க. அரசு பொறுப்பேற்றது முதல் மக்கள் நலப்பணிகளில் தீவிரம் காட்டி வருகிறது. அதன் அடிப்படையில் பொதுமக்களின் கோரிக்கை மனுக்களுக்கு விரைவில் தீர்வு காணும் வகையில் 'மக்களுடன் முதல்வர்' என்ற புதிய திட்டம் கடந்த ஆண்டு தொடங்கப்பட்டது. இந்தத் திட்டத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த டிசம்பரில் கோவையில் தொடங்கி வைத்தார்.
இந்நிலையில், மக்களுடன் முதல்வர் திட்டத்தின் இரண்டாவது கட்டம் ஜூலை மாதம் தொடங்கி செப்டம்பர் 15-ம் தேதி வரை நடைபெற உள்ளது. சுமார் 2,500 சிறப்பு முகாம்கள் நடத்தப்பட உள்ளது. இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்,
முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் 18.12.2023 அன்று கோவை மாநகரில் "மக்களுடன் முதல்வர்" திட்டத்தை தொடங்கிவைத்தார். முதற்கட்டமாக நகர்ப்புர உள்ளாட்சிகளுக்காகத் தொடங்கி வைக்கப்பட்ட "மக்களுடன் முதல்வர்" திட்டத்தில் அன்றாடம் பொதுமக்கள் அதிகமாக அணுகும் முக்கியத் துறைகள் சார்ந்த கோரிக்கைகள் அடையாளம் காணப்பட்டு, உள்ளாட்சி அமைப்புகளின் வார்டு மற்றும் கிராம ஊராட்சி அளவில் சம்பந்தப்பட்ட துறைகள் அனைத்தையும் ஒருங்கிணைத்து ஒரே குடையின் கீழ் கோரிக்கைகளைப் பெற அனைத்து மாவட்டங்களிலும் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டன.
ஐந்து மாதங்களில் தமிழ்நாடு முழுவதிலும் உள்ள மாநகராட்சிகளில் 641 முகாம்கள், நகராட்சிகளில் 632 முகாம்கள், பேரூராட்சிகளில் 520 முகாம்கள், புறநகர்ப் பகுதிகளில் 265 முகாம்கள் என ஏறத்தாழ ஒரு வார்டுக்கு ஒரு முகாம் வீதம் மொத்தம் 2,058 முகாம்கள் நடத்தப்பட்டன. இந்த முகாம்களில் முன்னதாகவே குறிப்பிடப்பட்ட முக்கியமான 13 துறைகள் மூலம் 44 சேவைகள் குறித்தும், முன்னதாக குறிப்பிடப்படாத சேவைகள் குறித்தும் பொதுமக்களிடமிருந்து மனுக்கள் பெறப்பட்டன.
நகர்ப்புர உள்ளாட்சிகளில் நடைபெற்ற சிறப்பு முகாம்களில் 2 இலட்சத்து 64 ஆயிரம் மனுக்களும், பிற சேவைகள் மூலம் பெறப்பட்ட 6 இலட்சத்து 40 ஆயிரம் மனுக்களும் பரிசீலிக்கப்பட்டு 30 நாட்களுக்குள் 8 இலட்சத்து 74 ஆயிரம் மனுக்கள் மீது ஒரு மாத காலத்திற்குள் தீர்வு காணப்பட்டு பொதுமக்கள் பெரிதும் பயனடைந்துள்ளனர்.
"மக்களுடன் முதல்வர்" திட்டத்தின் முதற்கட்ட வெற்றியைத் தொடர்ந்து இரண்டாம் கட்டமாக தமிழ்நாட்டிலுள்ள அனைத்து கிராம ஊராட்சிகளிலும் இத்திட்டம் குறித்த சிறப்பு முகாம்களை நடத்திட அரசு முடிவு செய்துள்ளது. வரும் ஜூலை 15 முதல் செப்டம்பர் 15 வரை இந்த முகாம்களை நடத்திடவும், இந்த முகாம்களில் பெறப்படும் மனுக்கள் மீது ஆகஸ்ட் 15 முதல் அக்டோபர் 15-குள் தீர்வு காணப்பட வேண்டும் என்ற நோக்கில் இலக்குகள் நிர்ணயிக்கப்பட்டு "மக்களுடன் முதல்வர்" திட்டம் இரண்டாம் கட்டமாக செயல்படுத்தப்படவுள்ளது.
இந்த இரண்டாம் கட்டத்தில், "மக்களுடன் முதல்வர்" திட்டத்தின் கீழ் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை, பிற்படுத்தப்பட்டோர்-மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை, கூட்டுறவு-உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை, எரிசக்தித்துறை, உள்-மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை, தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை, குறு சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை, வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை, சமூகச் சீர்திருத்த துறை, மாற்றுத் திறனாளிகள் நலத்துறை, வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை, வேளாண்மை – உழவர் நலத்துறை, கால்நடை பராமரிப்பு, பால்வளம், மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை ஆகிய 15 துறைகள் சார்ந்த மனுக்கள் இந்த முகாம்களில் பொதுமக்களிடமிருந்து பெறப்படும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 9 months 1 week ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 9 months 2 weeks ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 10 months 1 week ago |
-
அஜித்குமார் பிரேத பரிசோதனை அறிக்கையில் அதிர்ச்சி தகவல்கள்
04 Jul 2025சிவகங்கை, திருப்புவனம் இளைஞர் அஜித்குமாரின் பிரேதபரிசோதனை அறிக்கையில் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது
-
தங்கம் விலை சற்று சரிவு
04 Jul 2025சென்னை, தங்கம் விலை நேற்று சவரனுக்கு 440 ரூபாய் குறைந்து ஒரு சவரன் 72,400 ரூபாய்க்கும் விற்பனையானது.
-
அரசு ஊழியர்களுக்கு அக். 1 முதல் ஈட்டிய விடுப்பு சரண் நடைமுறை: தமிழ்நாடு அரசு அறிவிப்பு
04 Jul 2025சென்னை, தமிழக அரசு ஊழியர்களுக்கு ஈட்டிய விடுப்பு சரண், வரும் அக்டோபர் 1-ம் தேதி முதல் நடைமுறைக்கு வரும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.
-
ஆபரேஷன் சிந்தூரின் போது 3 எதிரிகளை எதிர் கொண்டோம்: ராணுவ துணை தலைமை தளபதி
04 Jul 2025புதுடெல்லி, ஆபரேஷன் சிந்தூரின் போது ஒரு எல்லையில் பாகிஸ்தான், சீனா, துருக்கி என 3 எதிரிகளை எதிர்கொள்ள வேண்டி இருந்தது என்று ராணுவத் துணைத் தலைமை தளபதி ராகுல் ஆர்.
-
பரந்தூர் விமான நிலையம்: முதல்வருக்கு விஜய் கடிதம்
04 Jul 2025சென்னை : பரந்தூரில் விமான நிலையம் அமைக்கப்படாது என்கிற உத்தரவாதத்தை அப்பகுதி மக்களுக்கு உடனடியாக அளிக்க வேண்டும் என என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு த
-
திருப்பூர் மாவட்டம் புதுப்பெண் தற்கொலை வழக்கில் மாமியார் கைது
04 Jul 2025திருப்பூர் : திருப்பூர் மாவட்டம் அருகே புதுப்பெண் ரிதன்யா தற்கொலை வழக்கில் மாமியாரை போலீசார் கைது செய்தனர்.
-
வரும் 2026 சட்டப்பேரவை தேர்தல் த.வெ.க. முதல்வர் வேட்பாளர் விஜய்: பனையூர் கூட்டத்தில் 20 தீர்மானங்கள்
04 Jul 2025சென்னை, 2026 சட்டசபை தேர்தலில் முதல்வர் வேட்பாளர் விஜய். த.வெ.க. தலைமையில் தான் கூட்டணி அமைக்கப்படும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
-
பரபரப்பான வாக்கெடுப்பில் அதிபர் டொனால்ட் டிரம்பின் வரி மசோதா 4 வாக்குகள் வித்தியாசத்தில் நிறைவேற்றம்
04 Jul 2025வாஷிங்டன் : அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிமுகம் செய்த 'பிக் பியூட்டிபுல் பில்' எனப்படும் வரி மற்றும் செலவு மசோதா காங்கிரசில் குறுகிய பெரும்பான்மையுடன் நிறைவேற்றப்
-
திருச்செந்தூர் கோவிலில் பக்தர்கள் தங்கும் விடுதி: முதல்வர் மு.க. ஸ்டாலின் திறந்து வைத்தார்
04 Jul 2025சென்னை, திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் ரூ.10.57 கோடி செலவில் கட்டப்பட்ட பக்தர்கள் தங்கும் விடுதியை திறந்து வைத்து, ராமேஸ்வரம் ராமநாத சுவாமி கோவிலின் 6 பணியா
-
டிரினிடாட் - டொபாகோ பிரதமருக்கு கும்பமேளா புனிதநீரை பரிசாக வழங்கினார் பிரதமர் மோடி
04 Jul 2025போர்ட் ஆப் ஸ்பெயின் : டிரினிடாட்- டொபாகோ நாட்டுக்கு சென்றுள்ள பிரதமர் நரேந்திர மோடி, அந்நாட்டின் பிரதமர் கமலா பெர்சாத்-பிஸ்ஸேசருக்கு மகாகும்பமேளாவின் புனித நீரையும், ரா
-
தி.மு.க., பா.ஜ.க.வுடன் என்றைக்கும் த.வெ.க. கூட்டணி இல்லை: விஜய்
04 Jul 2025சென்னை, தி.மு.க., பா.ஜ.க.வுடன், என்றைக்கும் நேரடியாகவோ, மறைமுகவோ கூட்டணி இல்லை, என்பதில் த.வெ.க.
-
கை விரல் ரேகை பதியாதவர்களின் ரேஷன் கார்டுகள் செல்லாதா..? தமிழக அரசு விளக்கம்
04 Jul 2025சென்னை, வரும் ஜூன் 30-ம் தேதிக்குள் கை விரல் ரேகை பதியாதவர்களின் ரேஷன் கார்டுகள் செல்லாது என சமூக வலைத்தளங்களில் பரவி வரும் தகவல்களுக்கு தமிழக அரசு விளக்கமளித்துள
-
அஜித்குமார் கொலை வழக்கு: நீதிபதியிடம் திருப்புவனம் அரசு மருத்துவர் சாட்சியம்
04 Jul 2025சிவகங்கை : உயரதிகாரிகள் கூறியதாக, போலீஸார் அஜித்குமார் உடலை எடுத்துச் சென்றனர் என மாவட்ட நீதிபதியிடம் திருப்புவனம் அரசு மருத்துவர் கார்த்திகேயன் சாட்சியம் அளித்தார்.
-
நகர வளர்ச்சியை நோக்கமாக கொண்ட கோயம்புத்தூர் 2-வது முழுமைத் திட்டம்: : முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார்
04 Jul 2025சென்னை : தமிழ்நாட்டின் நகர வளர்ச்சியை நோக்கமாக கொண்ட கோயம்புத்தூர் 2-வது முழுமைத் திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார்.
-
மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு
04 Jul 2025மேட்டூர் : மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 19,286 கன அடியாக அதிகரித்துள்ளது.
-
யுவராஜ் சிங் மீண்டும் கேப்டன்
04 Jul 2025ஓய்வு பெற்ற வீரர்கள் பங்கேற்கும் 2-வது உலக சாம்பியன்ஸ் ஆப் லெஜெண்ட்ஸ் லீக் தொடர் வரும் 18-ம் தேதி தொடங்க உள்ளது.
-
பா.ம.க. கொறடா பொறுப்பில் இருந்து என்னை நீக்க முடியாது: அருள் எம்.எல்.ஏ.
04 Jul 2025சென்னை, ஜி.கே.மணி அனுமதி இல்லாமல் பா.ம.க. கொறடா பொறுப்பில் இருந்து என்னை நீக்க முடியாது என்று அருள் எம்.எல்.ஏ. தெரிவித்துள்ளார்.
-
திபெத் விவகாரத்தில் இந்தியாவுக்கு சீனா எச்சரிக்கை
04 Jul 2025பெய்ஜிங் : திபெத் விவகாரத்தில் தலையிடுவதை இந்தியா நிறுத்திக் கொள்ள வேண்டும் என்று சீனா எச்சரிக்கை விடுத்துள்ளது.
-
இங்கி.க்கு எதிரான 2-வது டெஸ்ட்: அடுத்தடுத்த பந்துகளில் விக்கெட் கைப்பற்றி முகமது சிராஜ் அசத்தல்
04 Jul 2025பர்மிங்காம் : 2-வது டெஸ்ட் போட்டியில், அடுத்தடுத்த பந்துகளில் விக்கெட் கைப்பற்றி சிராஜ் அசத்தினார்.
587 ரன்கள் குவிப்பு...
-
உக்ரைன் உடனான போர்: புதின் மீது ட்ரம்ப் அதிருப்தி
04 Jul 2025வாஷிங்டன் : உக்ரைன் உடனான போரை ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் நிறுத்துவார் என்று தோன்றவில்லை என்றும் அவர் விஷயத்தில் தான் ஏமாற்றம் அடைந்துள்ளதாகவும் அமெரிக்க அதிபர் டொனா
-
சொகுசு கப்பலுக்கு எதிர்ப்பு தெரிவித்து புதுச்சேரி அ.தி.மு.க. மறியல் போராட்டம்
04 Jul 2025புதுச்சேரி : சுற்றுலா சொகுசு கப்பல் வருகையை எதிர்த்து அ.தி.மு.க. மறியல் போராட்டம் நடத்தியது.
-
ஓராண்டில் 17,702 பேர் தேர்வு: டி.என்.பி.எஸ்.சி. தகவல்
04 Jul 2025சென்னை : டி.என்.பி.எஸ்.சி.
-
இமாச்சல்லில் மேகவெடிப்பு: 69 பேர் பலி; ரூ.700 கோடி சேதம்
04 Jul 2025சிம்லா : இமாச்சல பிரதேச மாநிலத்தில் பருவமழைக் காரணமாக ஏற்பட்ட மேகவெடிப்பு, மழை வெள்ளம், நிலச்சரிவு ஆகியவற்றால் 69 பேர் உயிரிழந்துள்ளனர்.
-
செஸ் விளையாடவே பிடிக்கவில்லை: குகேஷிடம் தோற்ற கார்ல்சென் விரக்தி
04 Jul 2025சாக்ரப் : தற்போதைக்கு தனக்கு செஸ் விளையாடவே பிடிக்கவில்லை என்று உலகின் நம்.1 வீரரான மாக்னஸ் கார்ல்சென் தெரிவித்துள்ளார்.
-
கால்நடை பராமரிப்புத்துறைக்கு ரூ.25 கோடியில் புதிய கட்டிடங்கள்: முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்
04 Jul 2025சென்னை, சென்னை தலைமை செயலகத்தில் நேற்று நடந்த நிகழ்ச்சியில் கால்நடை பராமரிப்புத்துறை சார்பில் ரூ.25.15 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள கட்டிடங்களை முதல்வர் மு.க.ஸ்டால