எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Source: provided
பஷானோ : ஜி7 மாநாட்டில் பங்கேற்க இத்தாலி சென்றுள்ள பிரதமர் மோடி, பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரான், பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனக், உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி உள்ளிட்டோரை சந்தித்து பேசினார்.
ஜி7 நாடுகளின் உச்சி மாநாடு, இத்தாலியின் பஷானோ நகரில் உள்ள அபுலியாவில் நடக்கிறது. இந்த மாநாட்டில் கலந்து கொள்ள பிரதமர் மோடி இத்தாலி சென்றுள்ளார். அங்கு அவருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. மாநாட்டின் இடையே, பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரானுடன் பிரதமர் மோடி ஆலோசனை நடத்தினார்.
இந்த சந்திப்பு தொடர்பாக வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் ரன்தீர் ஜெய்ஸ்வால் வெளியிட்ட பதிவில் கூறியதாவது: இரு தலைவர்களும் பாதுகாப்பு, அணுசக்தி, விண்வெளி,கல்வி, பருவநிலை மாற்றம், டிஜிட்டல் உள்கட்டமைப்பு, தொழில்நுட்பம் ஆகியவை குறித்து ஆலோசனை நடத்தினர். உள்நாட்டு மற்றும் சர்வதேச பிரச்னைகள் தொடர்பாக இரு தலைவர்களும் கருத்துகளை பரிமாறிக் கொண்டனர். இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.
இந்த நிலையில் இத்தாலி சென்றுள்ள பிரதமர் மோடி, தெற்கு இத்தாலிய ரிசார்ட் நகரில் பிரிட்டன் பிரதமா் ரிஷி சுனக்கை சந்தித்து பேசியுள்ளார். அப்போது இருதரப்பு உறவுகள் மற்றும் பொதுவான நலன்கள் குறித்து இரு தலைவர்களும் விவாதித்ததாக தெரிகிறது. முன்னதாக கடந்த செப்டம்பரில் நடந்த G20 உச்சிமாநாட்டில் பங்கேற்க தில்லி வந்தபோது பிரிட்டன் ரிஷி சுனக்கை, பிரதமர் மோடி சந்தித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதற்கிடையே உக்ரைன் அதிபர் விளாடிமிர் ஜெலென்ஸ்கியுடன் பிரதமர் நரேந்திர மோடி வெள்ளிக்கிழமை பேச்சுவார்த்தை நடத்தினார். ரஷியா-உக்ரைன் போரின் பல்வேறு அம்சங்கள் குறித்து பிரதமர் மோடியிடம் ஜெலென்ஸ்கி விளக்கமளித்ததாகத் தெரிகிறது.கடந்த ஆண்டு மே மாதம் ஹிரோஷிமாவில் நடந்த ஜி7 உச்சி மாநாட்டின் போது பிரதமர் மோடி, ஜெலென்ஸ்கியை சந்தித்தார்.உக்ரைனில் நிலவும் கடுமையான போரை பேச்சுவார்த்தை மூலம் தான் தீர்க்க வேண்டும் என்று இந்தியா தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 3 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 3 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 4 months ago |


