Idhayam Matrimony

புதிய குற்றவியல் சட்டங்கள் ஜூலை 1-முதல் அமலுக்கு வரும் : மத்திய சட்ட அமைச்சர் அர்ஜுன் ராம் மேக்வால் தகவல்

ஞாயிற்றுக்கிழமை, 16 ஜூன் 2024      இந்தியா
Arjun-Ram-Maghwal 2024-05-1

Source: provided

புதுடெல்லி : புதிய குற்றவியல் சட்டங்கள் ஜூலை 1-ம் தேதி முதல் அமலுக்கு வரும் என மத்திய சட்டத்துறை அமைச்சர் அர்ஜுன் ராம் மேக்வால் தெரிவித்துள்ளார்

நாட்டின் குற்றவியல் நீதி அமைப்பை முழுமையாக மாற்றியமைக்கும் நோக்கில் புதிதாக பாரதிய நியாய சன்ஹிதா, பாரதிய நகரிக் சுரக்ஷா சன்ஹிதா மற்றும் பாரதீய சாக்ஷியா சட்டம் ஆகிய 3 குற்றவியல் சட்டங்கள் இயற்றப்பட்டுள்ளன.

இந்த மூன்று சட்டங்களுக்கும் கடந்த டிசம்பர் 21-ம் தேதி பாராளுமன்றத்தில் ஒப்புதல் பெறப்பட்ட நிலையில், ஜனாதிபதி திரவுபதி முர்மு டிசம்பர் 25-ம் தேதி இந்த சட்டங்களுக்கு ஒப்புதல் அளித்தார். 

இந்நிலையில் புதிய குற்றவியல் சட்டங்கள் ஜூலை 1-ம் தேதி முதல் அமலுக்கு வரும் என மத்திய சட்டத்துறை அமைச்சர் அர்ஜுன் ராம் மேக்வால் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக செய்தியாளர்களிடம்  அவர் கூறியதாவது, 

இந்திய சட்ட ஆணையத்தின் அறிக்கைகள் மற்றும் பல்வேறு ஆலோசனைகளுக்குப் பிறகு 3 புதிய குற்றவியல் சட்டங்கள் இயற்றப்பட்டுள்ளன. இவை வரும் ஜூலை 1-ம் தேதி முதல் அமலுக்கு வர உள்ளன. இந்த புதிய சட்டங்கள் தொடர்பாக அனைத்து சட்ட பல்கலைக்கழகங்களிலும் பயிற்சிகள் வழங்கப்படும் என்று தெரிவித்தார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 10 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 10 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 2 years 7 hours ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 2 years 7 hours ago
View all comments

வாசகர் கருத்து