முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இந்திய அணயின் வலிமை: ஹர்திக் பாண்ட்யாவிற்கு ஹர்பஜன் சிங் பாராட்டு

திங்கட்கிழமை, 17 ஜூன் 2024      விளையாட்டு
Harbhajan-Singh 2023-10-21

Source: provided

மும்பை : இந்திய கிரிக்கெட் அணியின் வலிமை 'ஹர்திக் பாண்ட்யா என்று ஹர்பஜன் சிங் பாராடியுள்ளார்.

சுற்றுக்குள் நுழைய...

டி20 உலகக் கோப்பைத் தொடரில் ஹார்திக் பாண்டியா மற்றும் ரிஷப் பந்த் இருவரும் இந்திய அணிக்கு மிகுந்த வலிமை சேர்ப்பதாக இந்திய அணியின் முன்னாள் வீரர் ஹர்பஜன் சிங் அவர்களைப் பாராட்டிள்ளார். டி20 உலகக் கோப்பைத் தொடரில் இந்திய அணி சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறியுள்ளது. அயர்லாந்து, பாகிஸ்தான் மற்றும் அமெரிக்காவுக்கு எதிரான வெற்றிகள் இந்திய அணியை சூப்பர் 8 சுற்றுக்குள் நுழைய வழிவகுத்தது. 

மிகவும் சிறப்பு.... 

இந்த நிலையில், டி20 உலகக் கோப்பைத் தொடரில் ஹார்திக் பாண்டியா எதிர்பார்த்ததை விட மிகவும் சிறப்பாக செயல்படுவதாகவும், மூன்றாவது இடத்தில் ரிஷப் பந்த் சிறப்பாக விளையாடுவதாகவும் இந்திய அணியின் முன்னாள் வீரர் ஹர்பஜன் சிங் தெரிவித்துள்ளார். இது குறித்து ஹர்பஜன் சிங் பேசியதாவது, ஹார்திக் பாண்டியா விக்கெட்டுகள் எடுப்பது இந்திய அணிக்கு மிகவும் சிறப்பானது. இந்திய அணியில் அவர் நான்காவது வேகப் பந்துவீச்சாளராக இடம்பெற்றுள்ளார். ஆனால், அவர் எடுத்துள்ள விக்கெட்டுகளைப் பார்க்கும்போது, எதிர்பார்த்ததை விட அவர் மிகவும் சிறப்பாக செயல்படுவது தெரியும். ரிஷப் பந்த 3-வது வீரராக களமிறங்கி அருமையாக விளையாடி வருகிறார்.

முதலிடத்தில்...

அவர் மூன்றாவது இடத்தில் களமிறங்கி சிறப்பாக விளையாடுவது இந்திய அணிக்கு வலிமை சேர்த்துள்ளது. 3-வது இடத்தில் அவர் களமிறங்குவதால், இடதுகை - வலதுகை காம்பினேஷனும் தொடர்கிறது. இந்திய அணி சிறப்பாக விளையாடியுள்ளது. அதன் காரணமாக அவர்கள் புள்ளிப்பட்டியலில் முதலிடத்தில் இருக்கின்றனர் என்றார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 10 months 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 10 months 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 11 months 2 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 11 months 2 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 1 month ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 1 month ago
View all comments

வாசகர் கருத்து