முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நியூஸிலாந்து அணியின் கேப்டன் பதவியில் இருந்து வில்லியம்சன் திடீர் விலகல்

புதன்கிழமை, 19 ஜூன் 2024      விளையாட்டு
Williamson 2024-06-19

Source: provided

சென்னை : நியூஸிலாந்து அணியின் கேப்டன் பொறுப்பில் இருந்து கேன் வில்லியம்சன் விலகியுள்ளார். மேலும், 2024-25 ஆண்டுக்கான தேசிய அணி ஒப்பந்தமும் தனக்கு வேண்டாம் என அவர் அறிவித்துள்ளார்.

ஒப்பந்தத்தில் இருந்து... 

நடப்பு டி20 உலகக் கோப்பை தொடரின் முதல் சுற்றோடு நியூஸிலாந்து அணி வெளியேறிய நிலையில் அவரது இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. முன்னதாக, கடந்த ஜனவரி மாதம் டெஸ்ட் கிரிக்கெட் கேப்டன் பொறுப்பில் இருந்து அவர் விலகினார். தற்போது ஒருநாள் மற்றும் டி20 கிரிக்கெட் கேப்டன் பொறுப்பில் இருந்தும் விலகியுள்ளார். அவர் தேசிய அணிக்காக ஒப்பந்தத்தில் இருந்து விலகினாலும் சிறப்பு பிரதிநிதித்துவத்தின் மூலம் சர்வதேச தொடர்களுக்கான நியூஸிலாந்து அணியில் அவரை தேர்வு செய்ய தயாராக இருப்பதாக நியூஸிலாந்து கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது.

அவர் தலைமையில்...

நியூஸிலாந்து அணிக்காக கடந்த 2010 முதல் ஒருநாள், டெஸ்ட் மற்றும் டி20 கிரிக்கெட்டில் வில்லியம்சன் விளையாடி வருகிறார். இதுவரை 358 போட்டிகளில் ஆடி 18,128 ரன்கள் எடுத்துள்ளார். 2015 மற்றும் 2019 ஒருநாள் உலகக் கோப்பை இறுதிப் போட்டி, 2021 டி20 உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் வில்லியம்சன் தலைமையிலான நியூஸிலாந்து அணி விளையாடி உள்ளது. ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பட்டத்தையும் அவரது தலைமையிலான அணி வென்றுள்ளது.

பெருமிதம் தெரிவித்த...

நியூஸிலாந்து அணிக்காக விளையாடும் வாய்ப்பை நான் பெற்றது எனக்கு பொக்கிஷமானது. அணிக்காக சிறந்த பங்களிப்பை தர வேண்டுமென்ற எனது விருப்பம் என்றும் குன்றியதில்லை என வில்லியம்சன் தெரிவித்துள்ளார். இதனை நியூஸிலாந்து கிரிக்கெட் வாரியம் வெளியிட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 11 months 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 11 months 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 4 days ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 4 days ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 2 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 2 months ago
View all comments

வாசகர் கருத்து