எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
புதுடெல்லி, ரஷியா-உக்ரைன் போரை நிறுத்துவதாக கூறிய மோடி, வினாத்தாள் கசிவை ஏன் நிறுத்தவில்லை? என்று ராகுல் காந்தி கேள்வி எழுப்பியுள்ளார்.
சமீபத்தில் வெளியான நீட் தேர்வு முடிகள் பல்வேறு சர்ச்சைகளை கிளப்பியுள்ளது. பல்வேறு மாநிலங்களில் மீண்டும் நீட் தேர்வை நடத்தவேண்டும் என கோரிக்கை விடுத்துள்ள மாணவர்கள், பல்வேறு போராட்டங்களிலும் ஈடுபட்டு வருகின்றனர்.தேசிய தேர்வுகள் முகமை சார்பில் இந்தாண்டு ஜூன் பருவத்துக்கான முதல் கட்ட நெட் தேர்வு சமீபத்தில் நடைபெற்றது. இந்த தேர்வை 9 லட்சத்துக்கும் அதிகமானோர் எழுதினார்கள்.
இதற்கிடையே, யுஜிசி நெட் தேர்வு ரத்து செய்யப்படுவதாகவும், புதிய தேர்வு நடத்துவது தொடர்பான அறிவிப்பு பின்னர் வெளியிடப்படும் என சொல்லப்பட்டு தேசிய தேர்வுகள் முகமை அறிவித்தது. இந்நிலையில், காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும், எம்.பி.யுமான ராகுல் காந்தி நேற்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:
பாராளுமன்றத்தில் யுஜிசி நெட் தேர்வு மற்றும் நீட் தேர்வு விவகாரத்தை நிச்சயம் எழுப்புவோம். பா.ஜ.க.வின் தாய் அமைப்பால் கல்வி முறை கைப்பற்றப்பட்டதே தேர்வு வினாத்தாள் கசிவுக்குக் காரணம். இது மாறாத வரை, வினாத்தாள் கசிவு தொடரும். மோடி ஜி இந்த பிடிப்பை எளிதாக்கினார். இது தேச விரோத செயல். ரஷியா-உக்ரைன் போரை மோடி தடுத்து நிறுத்தினார் என கூறப்படுகிறது. ஆனால் சில காரணங்களால், நரேந்திர மோடியால் இந்தியாவில் காகித கசிவை நிறுத்த முடியவில்லை அல்லது நிறுத்த விரும்பவில்லை. எங்கள் நிறுவனங்கள் அனைத்தும் கைப்பற்றப்பட்டதால் இது நடக்கிறது.
தகுதியில் அடிப்படையில் துணை வேந்தர்கள் தேர்வு செய்யப்படுவதில்லை. அவர்கள் ஒரு குறிப்பிட்ட அமைப்பைச் சேர்ந்தவர்கள் என்பதால் தேர்வு செய்யப்படுகின்றனர். இந்த அமைப்பும் பா.ஜ.க.வும் நமது கல்வி முறையை ஊடுருவி அழித்துவிட்டன. பண மதிப்பிழப்பு மூலம் பொருளாதாரத்திற்கு நரேந்திர மோடி செய்ததை, தற்போது கல்வி முறையிலும் செய்துள்ளார். இப்படி நடப்பதற்கும், நீங்கள் கஷ்டப்படுவதற்கும் காரணம் ஒரு சுதந்திரமான, புறநிலையான கல்விமுறை தகர்க்கப்பட்டதே. இங்கு குற்றவாளிகள் சட்டத்தின் முன் நிறுத்தப்பட்டு அவர்கள் தண்டிக்கப்படுவது மிக முக்கியம் என தெரிவித்தார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 3 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 3 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 4 months ago |


