எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Source: provided
சென்னை : இந்திய தவ்ஹீத் ஜமாஅத் தலைவர் எஸ்.எம். பாக்கர் மறைவுக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தை உருவாக்கியவர்களில் எஸ்.எம்.பாக்கரும் ஒருவர். நிர்வாகிகள் சிலருடன் ஏற்பட்ட கருத்து முரணால் அங்கிருந்து பிரிந்து பி.ஜெய்னுல் ஆபிதீனுடன் இணைந்து 2004-ம் ஆண்டு தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் என்ற அமைப்பை எஸ்.எம்.பாக்கர் உருவாக்கினார்.
இஸ்லாமிய சிறைவாசிகள் விடுதலை, இடஒதுக்கீடு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த அமைப்பு சார்பில் தமிழ்நாடு முழுவதும் போராட்டம் நடத்தப்பட்டது.
இந்த நிலையில் ஆபிதீனுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அமைப்பில் இருந்து விலகிய எஸ்.எம்.பாக்கர் இந்திய தவ்ஹீத் ஜமாஅத் என்ற அமைப்பைத் தொடங்கினார்.
கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு இருதய நோயால் பாதிக்கப்பட்ட எஸ்.எம். பாக்கர் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று நலமடைந்தார். எனினும், கடந்த சில மாதங்களாக தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்தார்.
இந்த நிலையில்,அவருக்கு நுரையீரலில் நிமோனியா தொற்று ஏற்பட்டது. இதனால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் நேற்று முன்தினம் இரவு காலமானார். அவரது மறைவிற்கு பல்வேறு தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர். அவரது மறைவிற்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |


