Idhayam Matrimony

சி.எஸ்.ஐ.ஆர். நெட் தேர்வு ஒத்திவைப்பு : தேசிய தேர்வு முகமை அறிவிப்பு

சனிக்கிழமை, 22 ஜூன் 2024      இந்தியா
CUET-PG 2024-04-13

Source: provided

புதுடெல்லி : முறைகேடு புகார் எதிரொலியாக யு.ஜி.சி. நெட் தேர்வு ஒத்திவைக்கப்பட்ட நிலையில், தற்போது சி.எஸ்.ஐ.ஆர். நெட் தேர்வும் ஒத்திவைக்கப்படுவதாக தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது.

அறிவியல் மற்றும் தொழில்துறை ஆராய்ச்சி கவுன்சிலான சி.எஸ்.ஐ.ஆர்., யு.ஜி.சி.யுடன் இணைந்து, வாழ்க்கை அறிவியல், வேதியியல் அறிவியல், இயற்பியல் அறிவியல், கணித அறிவியல் மற்றும் பூமி, வளிமண்டலம், பெருங்கடல் மற்றும் கிரக அறிவியல் ஆகிய 5 பாடங்களுக்கு நெட் தகுதி தேர்வை நடத்துகிறது. 

தேசிய தேர்வு முகமையினால் நடத்தப்படும் இத்தேர்விற்கு விண்ணப்பங்கள் கடந்த மே மாதம் 1-ம் தேதி முதல் தொடங்கி மே 27-ம் தேதி வரை பெறப்பட்டது. இதற்கான தேர்வு வரும் 25-ம் தேதி தொடங்கி  27-ம் தேதி வரை நடைபெற இருந்தது.

இந்நிலையில் தவிர்க்க முடியாத காரணங்களினால் தேர்வு ஒத்திவைக்கப்படுவதாக தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது. தேர்விற்கான புதிய அட்டவணை விரைவில் வெளியிடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.  

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 10 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 10 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 2 years 7 hours ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 2 years 7 hours ago
View all comments

வாசகர் கருத்து