எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
மாஸ்கோ, டிஜிட்டல் பரிவர்த்தனையில் உலகுக்கு நம்பகமான மாதிரியை வழங்கும் நடாக இந்தியா உள்ளது என்று பிரதமர் மோடி பெருமிதத்துடன் தெரிவித்தார்.
ரஷ்யாவுக்கு அரசுமுறை பயணம் மேற்கொண்டுள்ள பிரதமர் நரேந்திர மோடி, மாஸ்கோவில் இந்திய வம்சாவளியினர் மத்தியில் பேசினார். அப்போது பிரதமர் மோடி பேசியதாவது:-
மூன்றாவது முறையாக ஆட்சி அமைத்த பிறகு, முதல்முறையாக புலம்பெயர்ந்த இந்தியர்களுடன் உரையாடுகிறேன். மூன்றாவது முறையாக இந்தியாவின் பிரதமராகப் பதவியேற்று ஒரு மாதம் நிறைவடைந்துள்ளது.
3 மடங்கு வலிமையுடன், 3 மடங்கு அதிக வேகத்தில் பணியாற்றுவேன் என்ற உறுதியுடன் பதவியேற்றேன். இம்முறை இந்தியாவை உலகின் மூன்றாவது பொருளாதாரமாக மாற்றுவதே இலக்கு.
இந்த முறை ஏழைகளுக்கு மூன்றாவது கட்டமாக 3 கோடி வீடுகள் வழங்கப்படவுள்ளது. 3 கோடி கிராம பெண்களை லட்சாதிபதி ஆக்குவதே அரசின் இலக்கு. உலகில் வேறு எந்த நாடும் சென்றடைய முடியாத நிலவின் பகுதிக்கு சந்திரயானை வெற்றி அடைய செய்த நாடு இந்தியா.
டிஜிட்டல் பரிவர்த்தனையில் உலகுக்கு நம்பகமான மாதிரியை வழங்கும் நடாக இந்தியா உள்ளது. சொன்ன வாக்குறுதிகளை நிறைவேற்றும் நாடாக இந்தியா இன்று உள்ளது.
இந்தியா மாற்றத்தை நோக்கி செல்வதாக அனைவரும் கூறுகிறார்கள். கடந்த 10 ஆண்டுகளில் இந்தியாவின் வளர்ச்சியை கண்டு உலகம் வியப்படைந்துள்ளது. இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 3 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 3 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 4 months ago |


