எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
லக்னோ, மக்களவை எதிர்க்கட்சி தலைவரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான ராகுல் காந்தி தனது பாராளுமன்ற தொகுதியான ரேபரேலிக்கு ஒரு நாள் பயணமாக நேற்று சென்றார்.
முன்னதாக, ராகுல் காந்தி சென்ற விமானம் பர்சத்கஞ்ச் விமான நிலையத்திற்கு வர திட்டமிடப்பட்டிருந்தது, ஆனால் வானிலை காரணமாக அவர் லக்னோவில் தரையிறங்கினார். அங்கிருந்து சாலை வழியாக ரேபரேலியை சென்றடைந்தார்.
ரேபரேலியில் தொகுதியில் இருந்து மக்களவை தேர்தலில் வெற்றி பெற்ற பிறகு ராகுல் காந்தியின் 2-வது பயணம் இது என்பது குறிப்பிடத்தக்கது. இதற்கு முன்பு, அவர் தனது சகோதிரி பிரியங்கா காந்தி மற்றும் அமேதி தொகுதி எம்.பி. கிஷோரி லார் சர்மா ஆகியோருடன் ரேபரேலி மக்களுக்கும், கட்சி உறுப்பினர்களுக்கும் நன்றி தெரிவிக்கும் கூட்டத்தில் பங்கேற்றார்.
அதே போல், எதிர்க்கட்சி தலைவராக பொறுப்பேற்ற பிறகு முதல் முறையாக ரேபரேலி சென்ற ராகுல் காந்தி கட்சி தொண்டர்கள் மற்றும் மக்களை சந்தித்து பேசினார். மேலும், பல்வேறு பிரிவுகளைச் சேர்ந்த பிரதிநிதிகளையும் ராகுல் காந்தி சந்தித்து ஆலோசனை நடத்தினார்.
இதனை தொடர்ந்து, கடந்தாண்டு சியாச்சின் தீ விபத்தில் மக்களவை காப்பாற்றும் போது வீரமரணம் அடைந்த ராணுவ வீரர் அன்சுமான் சிங்கின் குடும்பத்தினரையும் அவர் சந்தித்தார். அதை தொடர்ந்து மாலை ராகுல் காந்தி டெல்லி புறப்பட்டு சென்றார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |


