எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
ஜம்மு, காஷ்மீரில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 5 ராணுவ வீரர்கள் உயிரிழந்தனர். இந்த சம்பவத்திற்கு மத்திய அமைச்சர் ராஜ்நாத்சிங் வேதனை தெரிவித்துள்ளார்.
ஜம்மு காஷ்மீரின் கத்துவா மாவட்டத்தின் மச்சேதி பகுதியில் இந்திய ராணுவ வாகனம் மீது பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் 5 ராணுவ வீரர்கள் மரணம் அடைந்தனர். 6 பேர் காயமுற்றனர். காயமுற்ற வீரர்களுக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
கத்துவா நகரில் இருந்து 150 கி.மீ. தொலைவில் பத்னோட்டா கிராமத்தில் ராணுவத்தினர் வழக்கமான ரோந்து பணியில் ஈடுபட்டு வந்தனர். அப்போது, இந்த தாக்குதல் நடந்துள்ளது.
முதலில் கையெறி குண்டு வீசிய பயங்கரவாதிகள் அதன்பிறகு சரமாரியாக துப்பாக்கிச்சூடு நடத்தினர். ராணுவத்தினர் பதில் தாக்குதல் நடத்திய போதிலும், பயங்கரவாதிகள் அருகாமையில் உள்ள காட்டின் வழியே தப்பிச் சென்றனர்.
மேலும், சில பகுதிகளில் ராணுவம் மற்றும் பயங்கரவாதிகள் இடையே கடும் துப்பாக்கிச் சூடு நடைபெறுவதாக தெரிகிறது. பயங்கரவாத தாக்குதலை தொடர்ந்து அந்த பகுதியில் கூடுதல் படையினர் குவிக்கப்பட்டு உள்ளனர். தப்பி ஓடிய பயங்கரவாதிகளை தேடும் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் இந்த சம்பவம் தொடர்பாக பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது,
ஜம்மு காஷ்மீரின் கத்துவா மாவட்டத்தின் பத்னோட்டாவில் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலில் நமது வீரம் மிக்க இந்திய ராணுவ வீரர்கள் ஐந்து பேரை இழந்ததற்காக மிகவும் வேதனைப்படுகிறேன். அவரை இழந்து வாடும் குடும்பங்களுக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்கள்.
இந்த கடினமான நேரத்தில் தேசம் அவர்களுடன் உறுதியாக நிற்கிறது. பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைகள் நடந்து வருகின்றன. மேலும் எங்கள் வீரர்கள் பிராந்தியத்தில் அமைதி மற்றும் ஒழுங்கை ஏற்படுத்துவதில் உறுதியாக உள்ளனர்.
இந்த கொடூரமான பயங்கரவாத தாக்குதலில் காயம் அடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 3 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 3 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 4 months ago |


