Idhayam Matrimony

பள்ளி பாடப்புத்தகங்கள் எப்பொழுது கிடைக்கும்? - என்.சி.இ.ஆர்.டி. விளக்கம்

புதன்கிழமை, 10 ஜூலை 2024      இந்தியா
CBSE 2023 07-14

Source: provided

புதுடெல்லி : அனைத்து வகுப்புகளுக்குமான 6 பாடப்புத்தகங்களும் ஜூலை 2024-க்குள் கிடைக்கும் என்று என்.சி.இ.ஆர்.டி விளக்கம் அளித்துள்ளது.

பாடப் புத்தகங்கள் தொடர்பாக வெளியான செய்திகளுக்கு என்.சி.இ.ஆர்.டி. அளித்துள்ள விளக்கத்தில், "அனைத்து வகுப்புகளுக்குமான 6 பாடப் புத்தகங்களும் ஜூலை 2024-க்குள் என்.சி.இ.ஆர்.டி மூலம் கிடைக்கும். மாதங்கள் ஆகும் என வெளியான செய்தி தவறானது. 

அனுபவ கற்றல் கண்ணோட்டத்தின் கீழ் நேரடி அனுபவங்களுக்கு ஆசிரியர்களுக்கும் மாணவர்களுக்கும் போதுமான நேரத்தை வழங்குவதற்கும், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் இருவரும் பழைய பாடத் திட்டத்திலிருந்து புதிய பாடத் திட்டத்திற்கு சுமுகமாக மாறுவதை உறுதி செய்வதற்கும், என்.சி.இ.ஆர்.டி ஏற்கெனவே 6-ம் வகுப்பிற்கான அனைத்து 10 பாடப் பகுதிகளிலும் ஒரு மாத கால இணைப்புத் திட்டத்தை வழங்கியுள்ளது. இது தற்போது கற்பித்தலுக்குப் பயன்படுத்தப்படுகிறது.

2. 3, 6 வகுப்புகளைத் தவிர மற்ற அனைத்து வகுப்புகளுக்கும், தற்போதுள்ள பாடத்திட்டம் அல்லது பாடப்புத்தகங்களில் எந்த மாற்றமும் இல்லை. முந்தைய கல்வியாண்டில் (2023-24) செய்ததைப்போலவே இந்த வகுப்புகளுக்கு அதே பாடப்புத்தகங்களைத் தொடர்ந்து பயன்படுத்துமாறு பள்ளிகளுக்கு சிபிஎஸ்இ மீண்டும் அறிவுறுத்தியுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 10 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 10 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 2 years 1 day ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 2 years 1 day ago
View all comments

வாசகர் கருத்து