எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

கச்சார், அஸ்ஸாமின் கச்சார் மாவட்டத்தில் புதன்கிழமை நடந்த கடுமையான என்கவுண்டர் தாக்குதலில் 3 தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். மேலும், இந்தத் தாக்குதலில் போலீசார் பலர் காயமடைந்துள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கௌகாத்தியில் உள்ள அஸ்ஸாம் காவல்துறை தலைமையகத்தின் மூத்த அதிகாரி ஒருவர், என்கவுண்டரில் 3 தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டதை உறுதிப்படுத்தியுள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், “ எங்கள் தரப்பில் காவல்துறையினர் சிலருக்கும் காயம் ஏற்பட்டது. கச்சார் மாவட்ட காவல்துறையிடம் இருந்து எங்களுக்கு இன்னும் அறிக்கை வரவில்லை. கிழக்கு தோலை கங்காநகரில் இருந்து 3 தீவிரவாதிகளை போலீஸார் கைது செய்தனர். அவர்கள் பயணம் செய்த ஆட்டோ ரிக்ஷாவில் இருந்து ஒரு ஏகே 47 துப்பாக்கி, ஒரு கைத்துப்பாக்கி மற்றும் பிற ஆயுதங்களையும் கைப்பற்றினர்.
மேலும், மற்ற பயங்கரவாதிகளைத் தேடி ஒரு போலீஸ் குழு நேற்று காலை அந்த மூன்று பேரையும் பாபன் ஹில்ஸ் பகுதிக்கு அழைத்துச் சென்ற போது என்கவுண்டர் நடந்துள்ளது. ஒரு மணி நேரத்திற்கும் மேலாக நீடித்த சண்டையில் மூன்று தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர். அதேநேரத்தில் 3 போலீஸாருக்கும் காயங்கள் ஏற்பட்டன. காயமடைந்த அனைவரும் சில்சார் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்” என்றார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 1 year 3 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 1 year 1 month ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 1 year 1 month ago |