முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

40 தொகுதிகளில் வெற்றி பெற செய்த தமிழக மக்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் மின்கட்டண உயர்வை பரிசாக அளித்துள்ளார் : முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜூ பேட்டி

புதன்கிழமை, 17 ஜூலை 2024      தமிழகம்
SR 2024 07 17

Source: provided

மதுரை : 40 தொகுதிகளில் வெற்றிபெற செய்த தமிழக மக்களுக்கு முதல்வர்  மு.க.ஸ்டாலின் மின்கட்டண உயர்வை பரிசாக அளித்துள்ளார் என்று மதுரையில் முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜூ எம்.எல்.ஏ.தெரிவித்துள்ளார்.

மதுரை மேற்கு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கோச்சடை பகுதியில் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.8 லட்சம் மதிப்பீட்டில் கோச்சடை பேருந்து நிறுத்தத்தில் புதிய பயணிகள் நிழற்குடை அமைப்பதற்கான பூமி பூஜையை முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜூ எம்.எல்.ஏ. துவக்கி வைத்தார். இதில் ஜெயந்திராஜூ மற்றும் வில்லாபுரம் ராஜா, எம்.எஸ்.பாண்டியன், ஆர்.அண்ணாத்துரை, பா.குமார், பரவை ராஜா, கு.திரவியம், வி.பி.ஆர்.செல்வகுமார், சோலைராஜா, பைக்காரா கருப்பசாமி,பகுதி முத்துவேல்,கவுன்சிலர் பி.கே.எம்.மாரிமுத்து, எஸ்.எம்.டி.ரவி, தங்கபாண்டி, ராஜா சீனிவாசன், வேளாங்கண்ணி, மலர்விழி உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.

பின்னர் மதுரை மாநகர மாவட்ட அ.தி.மு.க.செயலாளரும், முன்னாள் அமைச்சருமான செல்லூர் கே.ராஜூ எம்.எல்.ஏ. நிருபர்களிடம் கூறியதாவது- 

திமுக ஆட்சிக்கு வந்ததில் இருந்து 3 முறை மின் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. 40 தொகுதிகளில் வெற்றி பெற செய்த மக்களுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் மின் கட்டண உயர்வை பரிசாக அளித்துள்ளார். மதுரையில் தொடர் கொலை நடைபெற்று வருவதால் நடைப்பயிற்சிக்கு செல்ல கூட மக்கள் அச்சப்படுகின்றனர். தமிழகத்தில் ரவுடிகள் அட்டகாசம் அதிகரித்துள்ளது. நாடாளுமன்ற தேர்தலில் வேட்பாளர் டாக்டர் சரவணனை வானளாவ புகழ்ந்து பேசி வாக்கு கேட்டோம்.

ஆனால், மக்கள் சட்டமன்றத்திற்கு ஒரு பார்வை, நாடாளுமன்றத்திற்கு ஒரு பார்வை என வாக்குகளை செலுத்தியுள்ளனர்.யானைக்கும் அடி சறுக்கும். எம்.ஜி.ஆர், ஜெயலலிதா தலைமையே தோல்வியை சந்தித்துள்ளனர். நாடாளுமன்ற தேர்தல் களம் வேறு. சட்டமன்ற தேர்தல் களம் வேறு.இந்த முடிவுகள் இறுதி அல்ல. காலம் மாறும். அதிமுக மீண்டும் அரியணை ஏறும். எடப்பாடி பழனிச்சாமி எப்படி ஆட்சி செய்யப் போகிறார் என விமர்சனம் செய்யப்பட்ட நிலையில் 4.5 ஆண்டுகள் சிறப்பான ஆட்சியை தந்துள்ளார். 2026-ல் எடப்பாடி பழனிச்சாமியின் சாணக்கியதனத்தை பார்க்கப்போகிறீர்கள். இவ்வாறு அவர் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 11 months 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 11 months 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 4 days ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 4 days ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 2 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 2 months ago
View all comments

வாசகர் கருத்து