Idhayam Matrimony

தமிழக மீனவர்களும் குடிமக்கள் தான் அவர்களின் பாதுகாப்பு முக்கியமானது: மத்திய அரசுக்கு ஐகோர்ட் கிளை அறிவுறுத்தல்

வியாழக்கிழமை, 18 ஜூலை 2024      தமிழகம்
MDU-High-Court 2023-02-16

மதுரை, தமிழக மீனவர்களும் இந்திய குடிமக்கள் தான். தமிழக மீனவர்களின் பாதுகாப்பு முக்கியமானது என மத்திய அரசுக்கு ஐகோர்ட் மதுரைக் கிளை அறிவுறுத்தியுள்ளது.

இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்கள் 26 பேரை விடுவிக்க நடவடிக்கை எடுக்க மத்திய அரசுக்கு உத்தரவிடக் கோரி ராமநாதபுரம் மாவட்டம் மோர்ப்பண்ணையைச் சேர்ந்த தீரன் முருகன் ஐகோர்ட் மதுரைக் கிளையில் மனு தாக்கல் செய்தார்.  

அந்த மனுவில், இலங்கை கடற்படையினரால் தமிழக மீனவர்கள் சிறைபிடிக்கப்படுவது, படகுகள் பறிமுதல் செய்யப்படும் சம்பவங்கள் 34 ஆண்டுகளுக்கும் மேலாக நடைபெற்று வருகிறது. வாழ்வாதாரத்துக்காக மீன்பிடி தொழில் செய்து வரும் தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் குற்றவாளிகள் போல கைது செய்கின்றனர். எனவே, 26 மீனவர்களை விடுவிக்க உரிய நடவடிக்கை எடுக்க மத்திய அரசுக்கு உத்தரவிட வேண்டும் எனக் கோரியிருந்தார்.  

இந்த மனு நீதிபதிகள் ஆர். சுரேஷ்குமார், ஜி.அருள்முருகன் அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், தமிழக மீனவர்களும், இந்திய குடிமக்களே. அவர்களின் பாதுகாப்பு என்பது முக்கியமானது என்று தெரிவித்தனர். 

அதை தொடர்ந்து மத்திய அரசு தரப்பில், தமிழக மீனவர்களை மீட்க நடவடிக்கை எடுக்கப்படுகிறது எனத் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து நீதிபதிகள், இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்களை தமிழகம் கொண்டு வர தேவையான நடவடிக்கைகளை மத்திய அரசு எடுக்கும் என இந்த நீதிமன்றம் நம்புகிறது. வழக்கு முடித்து வைக்கப்படுகிறது என உத்தரவிட்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 10 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 10 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 2 years 1 day ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 2 years 1 day ago
View all comments

வாசகர் கருத்து