எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Source: provided
தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும் பிக்பாஸ் சீசன் 1 ஒன்றிலும் பங்குபெற்று பிரபலமானவர் பாலிவுட் சீரியல் நடிகை ரிதிமா பண்டிட். சில இணையத்தொடர்களிலும் திரைப்படங்களிலும் நடித்துள்ளார். ஷுப்மன் கில்லை இந்தாண்டு டிசம்பரில் திருமணம் செய்ய உள்ளதாக தகவல் வெளியாகியது. ஏற்கனவே இது குறித்து நடிகை தனது இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டிருந்தாலும் மீண்டும் இந்த சர்ச்சை எழுந்துள்ளது. ஏற்கனவே ஷுப்மன் கில், சச்சின் மகள் சாராவுடன் காதல் என சமூக வலைதளத்தில் வதந்திகள் கிளம்பியதும் குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் நேர்காணல் ஒன்றில் பேசிய ரிதுமா பண்டிட் இது குறித்து பேசியதாவது: நாங்கள் டேட்டிங் எதுவும் செய்யவில்லை. முதலில் எனக்கு ஷுப்மன் கில்லை தனிப்பட்ட முறையில் தெரியாது. நான் ஒருவேளை அவரை சந்தித்தால் நாங்கள் இது குறித்து பேசி சிரிப்போம். அவர் க்யூட்டாக இருக்கிறார். ஆனால், எங்களுக்குள் எதுவும் இல்லை. காலையில் இருந்து வாழ்த்து குறுஞ்செய்திகளும் தொலைப்பேசி அழைப்புகளுமாக வந்துகொண்டு உள்ளன. இது முற்றிலும் அபத்தமானது. நான் எதையும் மறைக்க விரும்புவதில்லை. எனது திருமணம் குறித்து நானே அறிவிப்பேன் என்றார்.
இஷான் கிஷனுக்கு வாழ்த்து
இந்திய அணியின் இளம் வீரர்களில் ஒருவரான இஷான் கிஷன் நேற்றஉ அவரது 26-வது பிறந்த நாளை கொண்டாடினார். இந்த நிலையில், இந்திய அணியின் சிக்ஸர் மன்னன் யுவராஜ் சிங் அவருக்கு தனது பிறந்தநாள் வாழ்த்துகளை தெரிவித்துள்ளார். இது தொடர்பாக யுவராஜ் சிங் அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டிருப்பதாவது: பிறந்தநாள் வாழ்த்துகள்.
இந்த சிறப்பான நாளை மகிழ்ச்சியாக கொண்டாடுங்கள். உங்களை இந்திய அணியில் விரைவில் பார்க்க ஆவலோடு காத்திருக்கிறேன் எனப் பதிவிட்டுள்ளார். இந்த ஆண்டின் தொடக்கத்தில் அறிவிக்கப்பட்ட பிசிசிஐயின் மத்திய ஒப்பந்தத்தில் இஷான் கிஷன் மற்றும் ஸ்ரேயாஸ் ஐயரின் பெயர் இடம்பெறாதது குறிப்பிடத்தக்கது.
இளவரசி ஸ்மிருதி மந்தனா
மும்பையைச் சேர்ந்த ஸ்மிருதி மந்தனா இந்திய மகளிர் அணியில் தொடக்க வீராங்கனையாக களமிறங்குகிறார். இடது கை பேட்டரான இவர் இந்தியாவுக்கு டெஸ்ட்டில் 629 ரன்களும் 85 ஒருநாள் போட்டிகளில் 3,585 ரன்களும் டி20களில் 3,320 ரன்களும் எடுத்துள்ளார். ஆர்சிபி அணி இதுவரை விளையாடிய 17 வருட ஐபிஎல் வரலாற்றில் ஒருமுறைகூட வென்றதில்லை. ஆனால் மகளிர் பிரீமியர் லீக்கில் ஆர்சிபி அணி 2024 ஆம் ஆண்டு கோப்பையை வென்றது. ஆர்சிபி அணி வரலாற்றில் மகளிர் பிரிவில் முதன்முறையாக கோப்பையை வென்று அசத்தியது.
ஆர்சிபி மகளிர் அணிக்கு தலைமை தாங்கியவர் ஸ்மிருதி மந்தனா. இந்நிலையில், ஸ்மிருதி மந்தனாவின் 28ஆவது பிறந்தநாளில் ஆர்சிபி நிர்வாகம் புதிய போஸ்டரை வெளியிட்டுள்ளது. அதில் இளவரசி மாதிரியான தோற்றத்தில் ஸ்மிருதி மந்தனா இருக்கிறார். இந்தப் போஸ்டர் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.
பாண்டியாவின் வைரல் பதிவு
ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி டி20 உலகக் கோப்பையை வென்று அசத்தியது. உலகக் கோப்பைத் தொடர் முழுவதும் சிறப்பாக செயல்பட்ட ஹார்திக் பாண்டியா, தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப்போட்டியில் ஆட்டத்தின் திருப்புமுனையாக அமைந்தார். தென்னாப்பிரிக்க வீரர் க்ளாசனின் விக்கெட்டை பாண்டியா வீழ்த்தியது ஆட்டத்தின் திருப்புமுனையாக அமைந்தது. மேலும் இறுது ஓவரினையும் ஹார்திக் பாண்டியா சிறப்பாக முடித்து கொடுத்தார். அதனால் இறுதியில் இந்திய அணி கோப்பையையும் கைப்பற்றியது.
இந்நிலையில் ஹார்திக் பாண்டியா தனது இன்ஸ்டா பக்கத்தில் 2023 உலகக் கோப்பையின்போது காயம் காரணமாக வெளியேறியபோது எடுத்த புகைப்படத்தினையும் டி20 உலகக் கோப்பைக்கு முன்பு எடுத்த புகைப்படத்தினையும் பகிர்ந்துள்ளார். அந்தப் பதிவில், “ 2023 உலகக் கோப்பை காயத்திலிருந்து எனக்கு கடினமான பயணம்தான். ஆனால் அதனிடையில் நான் எடுத்த முயற்சிதான் டி20 உலகக் கோப்பை வெற்றிக்கு உதவியது. கடின உழைப்பு எப்போதும் கவனம் பெறாமல் போகாது. நாம் அனைவரும் நமது சிறந்த உழைப்பினை தர முயற்சிப்போம், உடல்நலத்திலும் கவனம் செலுத்துவோம்” எனக் கூறியுள்ளார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 1 month ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 1 month ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 2 months ago |
-
கோவை மாணவி வன்கொடுமை: 3 பேர் சுட்டுப்பிடிப்பு
04 Nov 2025கோவை, கோவை மாணவி வன்கொடுமை குறித்து 3 பேர் கொண்ட கும்பலை போலீசார் சுட்டுப்பிடித்தனர்.
-
ஜாய் கிரிசில்டா குழந்தைக்கு நான் தான் அப்பா: மாதம்பட்டி ரங்கராஜ்
04 Nov 2025சென்னை: ஜாய் கிரிசில்டா குழந்தைக்கு நான் தான் அப்பா என்று மாதம்பட்டி ரங்கராஜ் ஒத்துக்கொண்டதாக மகளிர் ஆணையம் தெரிவித்துள்ளது.
-
மாமல்லபுரத்தில் இன்று த.வெ.க. சிறப்பு பொதுக்குழு கூட்டம்
04 Nov 2025சென்னை, த.வெ.க. சார்பில் மாமல்லபுரத்தில் பொதுக்குழு கூட்டம் இன்று நடக்கிறது. இதில் முக்கிய அறிவிப்புகள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
-
மணிப்பூரில 4 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை
04 Nov 2025இம்பால், மணிப்பூரில் 4 பயங்கரவாதிகள் சட்டுக்கொலை செய்யப்பட்டனர்.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 04-11-2025.
04 Nov 2025 -
160-க்கும் மேற்பட்ட இடங்களில் வெற்றி பெற்று பீகாரில் தே.ஜ.கூ ஆட்சி அமைக்கும்: அமித்ஷா
04 Nov 2025பாட்னா, பீகார் தேர்தலில் 160-க்கும் மேற்பட்ட இடங்களில் வெற்றி பெற்று தே.ஜ.கூ ஆட்சி அமைக்கும் என்று அமித்ஷா தெரிவித்துள்ளார்.
-
மகளிர் உலகக்கோப்பை சிறந்த அணி: இந்திய வீராங்கனைகள் 3 பேருக்கு இடம்
04 Nov 2025மும்பை: மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட்டின் சிறந்த அணியை தேர்வு செய்துள்ள ஐ.சி.சி.
-
சி.பி.எஸ்.இ. 10 - ம் வகுப்புத்தேர்வு அட்டவணையை மாற்ற வேண்டும்: அன்புமணி வலியுறுத்தல்
04 Nov 2025சென்னை, சி.பி.எஸ்.இ பத்தாம் வகுப்புத் தேர்வு அட்டவணையை மாற்ற வேண்டும் என்று அன்புமணி வலியுறுத்தியுள்ளார்.
-
கோவை பாலியல் வன்கொடுமை: அ.தி.மு.க. மகளிர் அணி ஆர்ப்பாட்டம்
04 Nov 2025கோவை: கோவை பாலியல் வன்கொடுமை துப்பாக்கியால் சுடப்பட்ட வர்கள் உண்மை குற்றவாளிகளா? என்று முன்னாள் அமைச்சர் வளர்மதி கேள்வி.
-
துணை பொதுச்செயலாளராக பொன்முடி மீண்டும் நியமனம்
04 Nov 2025சென்னை: தி.மு.க. துணை பொதுச்செயலாளராக மீண்டும் முன்னாள் அமைச்சர் பொன்முடியை நியமித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
-
விமானத்தின் அவசரகால கதவை திறக்க முயன்ற பயணியால் பரபரப்பு
04 Nov 2025லக்னோ: உத்தரபிரதேசத்தில் விமானத்தின் அவசரகால கதவை திறக்க முயன்ற பயணியால் பரபரப்பு ஏற்பட்டது.
-
அண்ணாமலைக்கு எதிரான மனு தள்ளுபடி
04 Nov 2025புதுடெல்லி: பா.ஜ.க. முன்னாள் தலைவர் அண்ணாமலைக்கு எதிரான மனு தள்ளுபடி செய்யப்பட்டது.
-
சபரிமலையில் 16-ம் தேதி நடை திறப்பு
04 Nov 2025திருவனந்தபுரம், சபரிமலையில் வருகிற 16-ந்தேதி நடை திறக்கப்படுகிறது.
-
தி.மு.க.விடம் பஞ்சம் பிழைக்க போயிருக்கிறார்: மனோஜ் பாண்டியன் மீது வைகைச் செல்வன் தாக்கு
04 Nov 2025சென்னை, நன்றி மறந்து பஞ்சம் பிழைக்க போயிருக்கிறார் மனோஜ் பாண்டியன் என்று வைகைச் செல்வன் தெரிவித்தார்.
-
ஐ.சி.சி. மகளிர் பேட்டிங் தரவரிசை: 10-ம் இடத்திற்கு முன்னேறினார் ஜெமிமா
04 Nov 2025துபாய்: சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலில்(ஐ.சி.சி.) ஒருநாள் கிரிக்கெட்டின் பேட்டிங் தரவரிசையில் தென்னாப்பிரிக்க அணியின் கேப்டன் லாரா 814 புள்ளிகளுடன் இந்திய துணை கேப்டன் ஸ
-
ஐதராபாத் அருகே சாலை விபத்து: 3 சகோதரிகள் பலியான சோகம்
04 Nov 2025தெலங்கானா: தெலங்கானாவின் ரங்காரெட்டி மாவட்டத்தில் நேற்று முன்தினம் காலை நடந்த விபத்தில், அரசு பேருந்தில் ஒரே இருக்கையில் அமர்ந்து ஐதராபாத் சென்ற 3 சகோதரிகள் பரிதாபமாக உ
-
பீகார் சட்டப்பேரவை தேர்தல்: அனல் பறந்த தேர்தல் பிரச்சாரம் ஓய்ந்தது 121 தொகுதிகளில் நாளை வாக்குப்பதிவு
04 Nov 2025பாட்னா: பீகாரில் முதல்கட்ட சட்டப்பேரவை தேர்தலுக்கான பிரச்சாரம் நேற்று மாலையுடன் ஓய்ந்தது.
-
ரஷ்யாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்
04 Nov 2025மாஸ்கோ: ரஷ்யாவில் அடுத்தடுத்து 2 முறை சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.
-
மத்திய அரசு மீது சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி குற்றச்சாட்டு
04 Nov 2025புதுடெல்லி: மத்திய அரசு மீது சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி பி.ஆர். கவாய் தலைமையிலான அமர்வு குற்றச்சாட்டு
-
சத்தீஸ்கரில் சரக்கு ரயில் மீது பயணிகள் ரயில் மோதல் 6 பேர் பலி - மீட்புப்பணி தீவிரம்
04 Nov 2025ராய்ப்பூர்: சத்தீஸ்கர் மாநிலத்தில் சரக்கு ரயில் மீது பயணிகள் ரயில் மோதிய விபத்தில் 6 பேர் உயிரிழந்தனர்.
-
நடுவானில் திடீர் கோளாறு: டெல்லி புறப்பட்ட விமானம் மங்கோலியாவில் தரையிறக்கம்
04 Nov 2025புதுடெல்லி: நடுவானில் கோளாறு ஏற்பட்டதால் டெல்லியில் இருந்து புறப்பட்ட விமானம் மங்கோலியாவில் அவசரமாக தரையிறக்கப்பட்டது.
-
ஆங்கில தேர்வில் தோல்வி: 7 ஆயிரம் லாரி டிரைவர்கள் பணிநீக்கம்
04 Nov 2025வாஷிங்டன்: ஆங்கில தேர்வில் தோல்வி அடைந்ததால் 7 ஆயிரம் லாரி டிரைவர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டனர்.
-
டெல்டா பாசனத்திற்கு மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறப்பு அதிகரிப்பு
04 Nov 2025மேட்டூர்: டெல்டா பாசனத்திற்கு மேட்டூர் அணையில் இருநது தண்ணீர் திறப்பு வினாடிக்கு 18 ஆயிரம் கனஅடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது.;
-
பொன்முடிக்கு மீண்டும் கட்சிப்பதவி: அ.தி.மு.க. கடும் விமர்சனம்
04 Nov 2025சென்னை: பொன்முடிக்கு மீண்டும் கட்சிப்பதவி வழங்கப்பட்ட நிலையில் அதுகுறித்து அ.தி.மு.க. கடும் விமர்சனம் செய்துள்ளது.
-
இரட்டை இலை சின்ன விவகாரம்: தேர்தல் ஆணையத்திற்கு செங்கோட்டையன் கடிதம்
04 Nov 2025ஈரோடு, இரட்டை இலை குறித்து தேர்தல் ஆணையத்திற்கு செங்கோட்டையன் கடிதம் எழுதியுள்ளார்.


