எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Source: provided
ரோம் : இத்தாலி பிரதமர் ஜியோர்ஜியா மெலோனியின் உயரம் குறித்து கிண்டலடித்த அந்நாட்டு பெண் பத்திரிகையாளருக்கு நீதிமன்றம் 5000 யூரோக்கள் அபராதம் விதித்துள்ளது.
இத்தாலியில் சுயாதீன பத்திரிகையாளராக செயல்பட்டு வரும் கோர்டீஸே, கடந்த 2021-ல் தனது டுவிட்டர் பக்கத்தில் தற்போதைய பிரதமர் மெலோனியின் பின்னணியில் இத்தாலிய சர்வாதிகாரி பெனிட்டோ முசோலினி இருக்கும் புகைப்படத்தை பதிவிட்டு மெலோனியின் உயரம் குறித்து கிண்டலடிக்கும் வகையில் பதிவிட்டிருந்தார். டுவிட்டர் பக்கத்தில் மட்டுமின்றி பல்வேறு சமூக ஊடகங்களிலும், உள்ளூர் ஊடகங்களிலும் அவர் இந்த கருத்தை தெரிவித்து இருந்தார்.
இந்த கருத்து தொடர்பாக இருவருக்குமிடையில் சமூக வலைதளத்தில் வாக்குவாதம் முற்றிய நிலையில் மெலோனி கோர்டீஸே மீது நீதிமன்றத்தில் உருவ கேலி வழக்கு தொடுத்திருந்தார்.
இந்நிலையில் இந்த வழக்கை விசாரித்து வந்த மிலான் நீதிமன்றம் தற்போது கோர்டீஸேக்கு 5000 யூரோக்கள் (ரூ.4.5 லட்சம்) அபராதம் விதித்து தீர்ப்பளித்துள்ளது.
இந்த தீர்ப்பு குறித்து பேசியுள்ள கோர்டீஸே, கருத்து சுதந்திரம் மற்றும் ஊடக சுதந்திரத்துக்கு எதிராக தீவிர பிரச்னையை இத்தாலி அரசு கொண்டுள்ளது. இது சுயாதீன பத்திரிகையாளர்களுக்கு கடுமையான காலம். வரும் காலத்தில் சிறந்த நாட்களுக்காக நாம் காத்திருப்போம். நாங்கள் மனம் தளரப் போவதில்லை என்று தெரிவித்துள்ளார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 7 months ago |


