முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

முடிவடையும் கவர்னர் ரவியின் பதவிக்காலம்: நீட்டிக்க மத்திய அரசு திட்டம்?

வெள்ளிக்கிழமை, 19 ஜூலை 2024      தமிழகம்
RN-Ravi 2023 04 05

Source: provided

சென்னை :  தமிழக கவர்னர் ஆர்.என். ரவியின் பதவிக்காலம் விரைவில் முடிவடைய உள்ள நிலையில், அவரது பதவிக்காலத்தை நீட்டிக்க மத்திய அரசு ஜனாதிபதிக்கு பரிந்துரை செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஆர்.என். ரவி நாகாலாந்து கவர்னராக கடந்த 2019-ம் ஆண்டு ஆகஸ்ட் 1-ம் தேதி நியமிக்கப்பட்டார். அதன் பின்னர் மேகாலயா கவர்னர் பொறுப்பையும் (டிசம்பர் 18, 2019 முதல் ஜனவரி 26, 2020 வரை) சேர்த்து கவனித்து வந்தார். 

நாகாலாந்து கவர்னராக இருந்த ரவியை, தமிழக கவர்னராக நியமித்து ஜனாதிபதி உத்தரவிட்டார். 2021-ம் ஆண்டு முதல் தமிழக கவர்னராக மாற்றப்பட்டு, தற்போது வரை நீடித்து வருகிறார்.  கவர்னருக்கான பதவிக்காலம் 5 ஆண்டுகள். 

ஆர்.என்.ரவி கவர்னராக 2019, ஆகஸ்டில் பொறுப்பேற்ற நிலையில், வரும்  31-ம் தேதியுடன் அவரது பதவிக்காலம் நிறைவடைகிறது. இதனால் தமிழகத்திற்கு புதிய கவர்னர் நியமிக்கப்படுவார் என்ற பேச்சு அடிபட்டது. 

ஆனால், கவர்னர் ஆர்.என். ரவியின் பதவிக்காலத்தை மேலும் நீட்டிக்க ஜனாதிபதி திரவுபதி முர்முவிடம் மத்திய அரசு பரிந்துரை செய்ததாக தகவல் வெளியாகியுள்ளது. சமீபத்தில் டெல்லி சென்ற கவர்னர் ஆர்.என். ரவி, மத்திய அமைச்சர்கள் அமித்ஷா, தர்மேந்திர பிரதான் உள்ளிட்டோரை சந்தித்து இது தொடர்பாக பேசியுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து