எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
புதுடெல்லி, பாரீஸ் ஒலிம்பிக் தொடரில் துப்பாக்கி சுடுதல் போட்டியில் பதக்கம் வென்ற மனு பாக்கருக்கு அரசு செலவிட்ட தொகை எவ்வளவு என்பது குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
வெண்கலப்பதக்கம்...
2024 பாரீஸ் ஒலிம்பிக் தொடரில் 10 மீட்டர் துப்பாக்கி சுடுதல் போட்டியில் பெண்கள் பிரிவில் இந்திய வீராங்கனை மனு பாக்கர் 221.7 புள்ளிகளைப் பெற்று வெண்கலப் பதக்கம் வென்றார். ஒலிம்பிக் போட்டியில் மனு பாக்கர் பதக்கம் வென்றதன் மூலம் இந்தியாவின் 12 ஆண்டுகால காத்திருப்புக்கு விடைகிடைத்துள்ளது. மேலும், ஒலிம்பிக் துப்பாக்கி சுடுதல் போட்டியில் பதக்கம் வென்ற முதல் பெண் என்ற பெருமையையும் மனு பாக்கர் படைத்துள்ளார். இதனால் மனு பாக்கரின் வெற்றி சிறப்பு வாய்ந்ததாகவே அமைந்துள்ளது.
கடின உழைப்பு...
மனு பாக்கரின் வெற்றிக்கு பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள், விளையாட்டு வீரர்கள், பயிற்சியாளர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். விளையாட்டுத் துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா மனு பாக்கருக்கு வாழ்த்து தெரிவித்து, செய்தியாளர்களை நேற்று (ஜூலை 29) சந்தித்தார். அப்போது அவரின் கடின உழைப்பு மற்றும் பயிற்சிக்கு ஆன செலவினங்கள் குறித்துப் பேசினார். இது தொடர்பாக ஏஎன்ஐ செய்தி நிறுவனத்துக்கு பேட்டியளித்த மன்சுக் மாண்டவியா, ''பாரீஸ் ஒலிம்பிக் போட்டியில் முதல் பதக்கம் வென்றதன் மூலம் மனு பாக்கர், இந்தியாவைப் பெருமைப்படுத்தியுள்ளார்
திறமை வாய்ந்த...
அவருடன் பேசும்போது, கேலோ இந்தியா திட்டத்தின் அங்கமாக இருப்பதாக அவர் குறிப்பிட்டார். திறன் கொண்ட விளையாட்டு வீரர்களுக்கு அடிப்படை வசதிகளை வழங்குவதை நோக்கமாகக் கொண்டு, பிரதமர் நரேந்திர மோடியால் கேலோ இந்தியா திட்டம் தொடங்கப்பட்டது. இதனால் நாட்டில் விளையாட்டுப் போட்டிகள் அதிகரித்தன. பள்ளிகள், கல்லூரிகள் அளவில் விளையாட்டு வீரர்கள் அடையாளம் காணப்படுகின்றனர். திறமை வாய்ந்த விளையாட்டு வீரர்களுக்கு சிறந்த பயிற்சியாளர்களை நியமித்து பயிற்சி அளிக்கப்படுகிறது. வீரர்காள் பொருளாதார ரீதியாக எந்தவொரு சிரமத்தையும் சந்திக்காத வகையில், ஏற்பாடுகள் செய்யப்படுகின்றன எனக் குறிப்பிட்டார்.
ரூ.2 கோடி வரை...
மனு பாக்கரின் பயிற்சி குறித்து பேசிய அவர், மனு பாக்கர் பயிற்சிக்கு ரூ.2 கோடி வரை செலவிடப்பட்டது. ஜெர்மனி, சுவிட்சர்லாந்து நாடுகளில் பயிற்சி பெற அனுப்பப்பட்டார். அவருக்குத் தேவையான, விருப்பப்பட்ட பயிற்சியாளரிடம் பயிற்சி பெற தேவையான பொருளாதார உதவிகள் வழங்கப்பட்டன. இதனை அனைத்து விளையாட்டு வீரர்களுக்கு வழங்கி வருகிறோம். இதன்மூலம் தேசிய மற்றும் சர்வதேச அளவில் வீரர்கள் சிறந்த பங்களிப்பை அளிக்கின்றனர். பாரீஸ் ஒலிம்பிக்கில் நமது வீரர், வீராங்கனைகளும் சிறப்பான ஆட்டத்தை வழங்குவார்கள் என்ற நம்பிக்கை உள்ளது. நம் விளையாட்டு வீரர்களை நாம் உற்சாகப்படுத்த வேண்டும். சமூக வலைதளங்களில் சீர்ஸ்ஃபார் பாரத் என்று பதிவிட்டு அவர்களை உற்சாகப்படுத்துங்கள்'' என மாண்டவியா குறிப்பிட்டார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 3 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 3 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 4 months ago |


