எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Source: provided
இங்கிலாந்து வெள்ளைப்பந்து கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளராக செயல்பட்டு வந்த ஆஸ்திரேலியாவை சேர்ந்த மேத்யூ மோட் அப்பதவியிலிருந்து விலகியதாக இங்கிலாந்து கிரிக்கெட் நிர்வாகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. கடந்த 2022ம் ஆண்டு இங்கிலாந்தின் தலைமை பயிற்சியாளராக 4 ஆண்டுகளுக்கு ஒப்பந்தம் செய்யப்பட்ட மேத்யூ மோட் ஒப்பந்தம் முடிவடைவதற்கு முன்னரே தற்போது தலைமை பயிற்சியாளர் பதவியிலிருந்து விலகி உள்ளார். இவரது பயிற்சியின் கீழ் 2022 டி20 உலகக்கோப்பைய வென்ற இங்கிலாந்து அணி, 2023 ஒருநாள் உலகக்கோப்பை, 2024 டி20 உலகக்கோப்பையில் தோல்வியை தழுவியது.
இதன் காரணமாக அவர் தலைமை பயிற்சியாளர் பதவியிலிருந்து விலகி இருக்கலாம் என தகவல்கள் வெளியாகி உள்ளன. மேத்யூ மோட் பதவி விலகியதை அடுத்து இங்கிலாந்து அணியின் உதவி பயிற்சியாளராக செயல்பட்டு வந்த மார்கஸ் ட்ரெஸ்கோதிக் இடைக்கால தலைமை பயிற்சியாளராக செயல்படுவார் என இங்கிலாந்து கிரிக்கெட் நிர்வாகம் அறிவித்துள்ளது.
அணியிலிருந்து விலகல்
ஆஸ்திரேலிய அணியின் அதிரடி ஆல் ரவுண்டர் ஆன கிளென் மேக்ஸ்வெல், ஐ.பி.எல். தொடரில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியில் விளையாடி வருகிறார். கடந்த 2021-ம் ஆண்டு நடைபெற்ற ஐ.பி.எல். சீசனில் பெங்களூரு அணியால் ஏலத்தில் வாங்கப்பட்ட அவர், அதன் பின் தற்போது வரை பெங்களூரு அணிக்காகவே விளையாடி வருகிறார். முந்தைய சீசன்களில் பெங்களூரு அணியின் வெற்றியில் முக்கிய பங்காற்றிய மேக்ஸ்வெல் இந்த வருடம் நடைபெற்ற தொடரில் பெங்களூரு அணியின் தோல்விக்கு முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறார்.
இதனையடுத்து அடுத்த ஐ.பி.எல். சீசனுக்கு முன்னதாக மெகா ஏலம் நடைபெற உள்ளது. இந்நிலையில் இந்த ஏலத்திற்கு முன்னதாக மேக்ஸ்வெல், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியிலிருந்து விலக உள்ளதாக சமூக வலைதளங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன. அதற்கான காரணம் என்னவெனில், மேக்ஸ்வெல் இன்ஸ்டாகிராம் சமூக வலைதளத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் அதிகாரபூர்வ பக்கத்தை அன்பாலோ செய்துள்ளதாக கூறப்படுகிறது. இதனால் அவர் பெங்களூரு அணியிலிருந்து விலக முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளிவந்த வண்ணம் உள்ளன.
டோனி விளையாடுவாரா?
2025 ஐபிஎல் சீசனுக்காக மெகா ஏலம் நடைபெற உள்ளதால் அனைத்து அணிகளும் கலைக்கப்பட உள்ளன. பிசிசிஐ தரப்பில் ஐபிஎல் அணிகள் மெகா ஏலத்திற்கு முன்பாக 5 இந்திய வீரர்களை தக்க வைக்க ஒப்புதல் கொடுத்தால், அடுத்த சீசனில் சிஎஸ்கே அணிக்காக டோனி மீண்டும் களமிறங்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அந்த ஏலத்துக்கு முன் ஒவ்வொரு அணியும் அதிகபட்சமாக 4 வீரர்களை மட்டுமே தக்க வைக்க முடியும். அது போன்ற சூழ்நிலையில் தக்க வைக்கும் வீரர்களின் எண்ணிக்கையை பிசிசிஐ அதிகரித்தால் மட்டுமே டோனி 2025 ஐபிஎல் தொடரில் விளையாட வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தற்சமயத்தில் கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட், ரவீந்திர ஜடேஜா, ஷிவம் துபே மற்றும் பதிரனா ஆகியோரை தக்க வைக்க சென்னை அணி நிர்வாகம் விரும்புவதாக செய்திகள் காணப்படுகின்றன. எனவே தக்க வைக்கப்படும் வீரர்களின் எண்ணிக்கை 5 அல்லது ஆறாக அதிகரித்தால் மட்டுமே 2025 சீசனில் விளையாடுவேன் என்று சிஎஸ்கே உரிமையாளர் என். ஸ்ரீனிவாசன் அவர்களிடம் டோனி பேசியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஆசிய கிரிக்கெட் கவுன்சில் தலைவர்
ஆசிய கிரிக்கெட் கவுன்சிலின் தலைவராக பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத் தலைவர் மோஷின் நக்வி நியமிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆசிய கிரிக்கெட் கவுன்சிலின் தகவலறிந்த வட்டாரங்கள் தரப்பில் தெரிவித்திருப்பதாவது: ஆசிய கிரிக்கெட் கவுன்சிலின் அடுத்த தலைவராக பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத் தலைவர் மோஷின் நக்வி நியமிக்கப்பட உள்ளார். இந்த ஆண்டு நடைபெறவுள்ள ஆசிய கிரிக்கெட் கவுன்சில் கூட்டத்தில் அவரை அடுத்த தலைவராக ஆசிய கிரிக்கெட் கவுன்சில் அறிவிக்கும். அவர் இரண்டு ஆண்டுகளுக்கு தலைவர் பொறுப்பில் தொடர்வார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் அடுத்த ஆண்டு இந்தியாவிலும், வருகிற 2027 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள தொடர் வங்கதேசத்திலும் நடத்தப்படும் என ஆசிய கிரிக்கெட் கவுன்சில் (ஜூலை 29) அறிவித்தது குறிப்பிடத்தக்கது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 1 year 3 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 1 year 1 month ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 1 year 1 month ago |