முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கனடாவில் ட்ரூடோ அரசுக்கான ஆதரவு வாபஸ்: புதிய ஜனநாய கட்சி அறிவிப்பு

வியாழக்கிழமை, 5 செப்டம்பர் 2024      உலகம்
Justin-Trudeau-2024-09-05

ஒட்டாவா, கனடாவில் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ அரசுக்கான ஆதரவை புதிய ஜனநாயகக் கட்சி வாபஸ் பெற்றது.  

கனடாவில் ஜஸ்டின் ட்ரூடோ தலைமையிலான, சிறுபான்மை லிபரல் கட்சியின் ஆட்சி நடக்கிறது. இங்கு கணிசமான எண்ணிக்கையில் வசிக்கும் சீக்கியர்களை பிரதிநிதித்துவம் செய்யும் வகையில் ஜக்மீத் சிங் தலைமையில் புதிய ஜனநாயகக் கட்சி செயல்படுகிறது. இந்த கட்சிக்கு 24 எம்.பி.க்கள் உள்ளனர். இவ்வளவு காலமாக ட்ரூடோவுக்கு ஆதரவு தெரிவித்து வந்தது.

சீக்கியர்களின் ஆதரவை பெறவும், அந்தக் கட்சித் தலைவர்களை மகிழ்விக்கவும், அவ்வப்போது அவர்களுக்கு ஆதரவாக ட்ரூடோ பேசுவது வழக்கம். பயங்கரவாத எண்ணம் கொண்டவர்களுக்கு ஆதரவாகவும், இந்தியாவுக்கு எதிராகவும் பேசுவதையும் வழக்கமாக கொண்டிருந்தார்.

இந்நிலையில், புதிய ஜனநாயகக் கட்சி அரசுக்கு அளித்து வந்த ஆதரவை வாபஸ் பெற்றதாக அறிவித்துள்ளது. சீக்கிய தலைவர் ஜக்மீத் சிங் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:

அரசியலில் கவனம் செலுத்துவதை விட, கடந்த ஆண்டுகளில் நாங்கள் செய்தது போல், கனடியர்களுக்கு ஆதரவாக இருப்பதில் புதிய ஜனநாயகக் கட்சி கவனம் செலுத்தும் என்று நான் நம்புகிறேன். 2022-ல் இருவரும் செய்து கொண்ட ஒப்பந்தத்தை கிழித்தெறிய உள்ளேன். 

தற்போதைய சூழலில் ஜஸ்டின் ட்ரூடோவால் எதிர்கட்சியான கன்சர்வேடிவ்களை எதிர்கொள்ள முடியவில்லை .2025 அக்டோபர் இறுதிக்குள் நடத்தப்பட வேண்டிய தேர்தலில் கன்சர்வேடிவ் கட்சியினர் எளிதில் வெற்றி பெறுவார்கள். அரசுக்கு அளித்து வந்த ஆதரவை நாங்கள் வாபஸ் பெறுகிறோம். இவ்வாறு அவர் கூறினார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து