எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
வாஷிங்டன், அமெரிக்காவின் ஜார்ஜியா மாநில பள்ளியில் துப்பாக்கிச்சூடு நடத்தியவர் 14 வயது மாணவன் என விசாரணையில் அம்பலமாகியுள்ளது.
அமெரிக்காவின் ஜார்ஜியாவின் பாரோ கவுண்டி மாகாணத்தில் அப்பலாஜி என்ற இடத்தில் உயர்நிலைப்பள்ளி உள்ளது. இங்கு நடந்த துப்பாக்கிச்சூட்டில் 4 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். 30க்கும் மேற்பட்டோர் பலத்த காயமுற்றனர். காயமடைந்தவர்களில் சிலர் மருத்துவமனையில் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
துப்பாக்கிச்சூடு நடத்திய நபரை போலீசார் சுற்றிவளைத்து பிடித்தனர். விசாரணையில், 4 பேரின் உயிரை பறித்தவர், 14 வயது மாணவர் என்றும், கொல்லப்பட்ட நான்கு பேரில் இருவர் சக மாணவர்கள், இருவர் ஆசிரியர்கள் என போலீசார் நடத்திய விசாரணையில் தெரியவந்துள்ளது.அமெரிக்காவில் துப்பாக்கிச்சூடு சம்பவங்கள் சர்வசாதாரணமாக நடக்கின்றன. இப்போது நடந்துள்ள சம்பவத்தில் சிறுவனே கொலைகாரனாக மாறி இருப்பது பெரும் வேதனை அளிப்பதாக, அந்நாட்டு கல்வியாளர்கள் தெரிவித்துள்ளனர்.ே
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |


