முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

புனித ஆரோக்கிய மாதா பேராலய திருவிழா: வேளாங்கண்ணியில் பெரிய தேர் பவனி இன்று நடக்கிறது

வெள்ளிக்கிழமை, 6 செப்டம்பர் 2024      ஆன்மிகம்
Velankanni 2024-09-06

நாகை, வேளாங்கண்ணியில் புனித ஆரோக்கிய மாதா பேராலய திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான பெரிய தேர் பவனி இன்று நடக்கிறது. தஞ்சை மறை மாவட்ட ஆயர் சகாயராஜ் தம்புராஜ் தேரை புனிதம் செய்து தொடங்கி வைக்கிறார்.

நாகை மாவட்டம் வேளாங்கண்ணியில் புனித ஆரோக்கிய மாதா பேராலயம் உள்ளது. இந்த ஆலயத்துக்கு வெளிநாடு, வெளி மாநிலங்கள், வெளியூர்களில் இருந்து ஏராளமானோர் வந்து செல்கின்றனர். மேலும் இது சுற்றுலா தளமாகவும் விளங்குகிறது. 

புகழ்பெற்ற இந்த பேராலய ஆண்டு திருவிழா ஆகஸ்ட் மாதம் 29-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், விழாவின் முக்கிய நிகழ்வான மாதாவின் மின் அலங்கார பெரிய தேர் பவனி இன்று (சனிக்கிழமை) நடக்கிறது. 

மாலை 5.15 மணிக்கு செபமாலை மாதா மன்றாட்டு நவநாள் செபத்தை தொடர்ந்து தஞ்சை மறை மாவட்ட ஆயர் சகாயராஜ் தம்புராஜ் தேரை புனிதம் செய்து தொடங்கி வைக்கிறார். தொடர்ந்து மறை மாவட்ட ஆயர் தலைமையில் சிறப்பு கூட்டு திருப்பலி நிறைவேற்றப்படும்.

தொடர்ந்து 8-ம் தேதி புனித ஆரோக்கிய மாதாவின் பிறந்தநாள் விழா நடைபெறுகிறது. அதை முன்னிட்டு காலை 6 மணிக்கு தஞ்சை மறை மாவட்ட ஆயர் தலைமையில் திருவிழா சிறப்பு கூட்டு பாடல் திருப்பலி நிறைவேற்றப்படுகிறது. மாலை 6 மணிக்கு திருக்குடி இறக்கும் நிகழ்ச்சி நடக்கிறது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 3 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 5 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 5 months ago
View all comments

வாசகர் கருத்து