எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Source: provided
விழுப்புரம் : விக்கிரவாண்டியில் மாநாடு நடத்த விஜய் கட்சிக்கு நிபந்தனைகளுடன் காவல்துறை நேற்று அனுமதி வழங்கியுள்ளதாக கூறப்படுகிறது.
நடிகர் விஜய் தொடங்கியுள்ள தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் முதல் மாநாட்டை விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலையில் வரும் 23-ம் தேதி நடத்த திட்டமிட்டு, இதற்காக அனுமதி கேட்டு கடந்த மாதம் 28-ம் தேதி எஸ்.பி.யிடம் மனு அளித்தனர்.
அன்றைய தினமே கூடுதல் எஸ்.பி. திருமால் மாநாடு நடைபெறுவதாக குறிப்பிட்டிருந்த இடத்தை ஆய்வு செய்து அரசுக்கு அறிக்கை அனுப்பியதாக கூறப்படுகிறது. இந்நிலையில், கடந்த 2-ம் தேதி மாநாடு தொடர்பாக விழுப்புரம் டி.எஸ்.பி. சுரேஷ், 21 கேள்விகளை கேட்டு அக்கட்சியின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்துக்கு நோட்டீஸ் அனுப்பினார்.
மாநாடு தொடங்கும் நேரம், முடியும் நேரம், நிகழ்ச்சி நிரல், மாநாட்டில் கலந்துகொள்ளும் முக்கிய நபர்கள், வாகன நிறுத்தம் ஏற்பாடு, அந்த இடத்துக்கான உரிமையாளர்கள் யார்? உள்ளிட்ட 21 கேள்விகளுக்கு 5 நாட்களில் பதில் அளிக்கவும் தெரிவித்திருந்தார்.
அதன்படி அக்கட்சியின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த், விழுப்புரம் டி.எஸ்.பி. சுரேஷிடம் காவல்துறை கேட்ட 21 கேள்விகளுக்கும் எழுத்துப்பூர்வமான பதிலை அளித்தார். இந்நிலையில் விக்கிரவாண்டியில் மாநாடு நடத்த விஜய் கட்சிக்கு நிபந்தனைகளுடன் காவல்துறை நேற்று அனுமதி வழங்கியுள்ளதாக கூறப்படுகிறது. இதற்கான முறையான அனுமதி கடிதம் பொதுச்செயலாளர் புஸ்சி ஆனந்திடம் வழங்கப்படும் என தெரிகிறது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 7 months ago |


