எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
மாஸ்கோ, உக்ரைனிலிருந்து ஏவப்பட்ட 140-க்கும் மேற்ப்பட்ட ஆளில்லா விமானங்களை (டிரோன்) ரஷ்ய வான் பாதுகாப்பு அமைப்பு இடைமறித்து அழித்துள்ளதாக ரஷ்யா தெரிவித்துள்ளது.
உக்ரைன் மீது கடந்த 2022-ல் ரஷ்யா போர் தொடுத்தது. இரண்டரை ஆண்டுகளாக நீடிக்கும் இந்த போரில், முக்கிய நகரங்களின் மீது இரு நாடுகளும் மாறி மாறி தாக்குதல் நடத்தி வருகின்றன. இந்த ஆண்டு துவக்கத்தில் இருந்தே ரஷ்யா மீதான வான்வழி தாக்குதலை உக்ரைன் தீவிரப்படுத்தியுள்ளது. இந்த நிலையில், ரஷ்ய தலைநகர் மாஸ்கோ மற்றும் அதைச் சுற்றியுள்ள பிராந்தியத்தை இலக்காகக் கொண்டு உக்ரைனிலிருந்து ஏவப்பட்ட 140-க்கும் மேற்ப்பட்ட ஆளில்லா விமானங்களை (டிரோன்) ரஷ்ய வான் பாதுகாப்பு அமைப்பு இடைமறித்து அழித்துள்ளதாக ரஷ்யா தெரிவித்துள்ளது.
போர் தொடங்கிய பிறகு உக்ரைனால் நடத்தப்பட்ட மிகப்பெரிய டிரோன் தாக்குதலில் இது 2-வது ஆகும். மாஸ்கோவிற்கு வெளியே ராமென்ஸ்காய் நகரில் இரவு நேரத்தில் உக்ரைனின் 2 டிரோன்கள் அடுக்குமாடி குடியிருப்பு கட்டிடங்களை தாக்கியதாக மாஸ்கோ பிராந்திய கவர்னர் ஆண்ட்ரி வோரோபியோவ் கூறியுள்ளார். இந்த தாக்குதலில் ஒரு பெண், 9 வயது சிறுமி உயிரிழந்துள்ளதாகவும் 3 பேர் காயமடைந்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
மாஸ்கோவின் புறநகர் பகுதியில் உள்ள ஒரு வீட்டின் மீது டிரோன் குப்பைகள் விழுந்ததில் அதில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என மேயர் செர்ஜி சோபியான் தெரிவித்துள்ளார். கடந்த 1-ம் தேதி உக்ரைனில் இருந்து ஏவப்பட்ட 158 ஆளில்லா விமானங்களை ஒரே இரவில் ரஷ்ய வான் பாதுகாப்பு அமைப்பு இடைமறித்து அழித்தது குறிப்பிடத்தக்கது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |


