எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
மூணாறு, மூணாறு அருகே ராஜமலை வனப்பகுதியில் வரும் 13-ம் தேதி மின்சார பஸ் சேவை துவக்கி வைக்கப்படுகிறது.
மூணாறு அருகே உள்ள ராஜமலை, இயற்கை எழில் கொஞ்சும் வனப்பகுதியாகும். இங்கு வரையாடுகள் அதிக அளவில் உள்ளன. இதனை பார்த்து ரசிக்க ஏராளமான சுற்றுலா பயணிகள் அங்கு சென்று வருகின்றனர். மூணாறு-உடுமலை சாலையில் ஐந்தாம் மைல் என்ற இடத்தில் இருந்து வனத்துறைக்கு சொந்தமான பஸ்களில் ராஜமலைக்கு வனத்துறையினர் அழைத்து செல்கின்றனர். இதற்காக மொத்தம் 9 பஸ்கள் இயக்கப்படுகின்றன.
டீசல் மூலம் இயக்கப்படும் அந்த பஸ்களால், ராஜமலை பகுதியில் சுற்றுச்சூழல் பாதிக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது. இதை கருத்தில் கொண்டு அந்த 9 பஸ்களையும் நிறுத்தி விட்டு, அதற்கு பதிலாக மின்சாரத்தால் இயங்கக்கூடிய பஸ்களை இயக்க வனத்துறை முடிவு செய்துள்ளது. இந்த நிலையில் மின்சார பஸ் சேவை தொடக்க விழா, வருகிற 13-ம் தேதி வெள்ளிக்கிழமை நடைபெறுகிறது.
விழாவில், கேரள வனத்துறை அமைச்சர் சசீந்திரன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு மின்சார பஸ் சேவையை தொடங்கி வைக்கிறார். இதன் மூலம் ராஜமலை பகுதியில் சுற்றுச்சூழல் பாதுகாக்கப்படும் என்று வனத்துறை அதிகாரிகள் ஹரி கிருஷ்ணன், நிதின் லால் ஆகியோர் தெரிவித்துள்ளனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 5 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 5 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |


