எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
மும்பை, மகராஷ்டிரா சட்டசபை தேர்தலில் பா.ஜ.க. 140 முதல் 150 தொகுதிகளில் போட்டியிட வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
மஹாராஷ்டிராவில் விரைவில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. 287 தொகுதிகள் கொண்ட இந்த மாநிலத்தில் தற்போது பா.ஜ.க. -சிவ சேனா- தேசியவாத காங்கிரஸ் கூட்டணி ஆட்சியில் உள்ளது. சிவசேனாவின் ஏக்நாத் ஷிண்டே முதல்வராக பதவி வகிக்கிறார். எதிர்க்கட்சி வரிசையில் காங்கிரஸ், உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனா, சரத்பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் ஆகிய கட்சிகள் உள்ளன. லோக்சபா தேர்தலில் அதிக தொகுதிகளில் வெற்றி பெற்றதை தொடர்ந்து, பாதியில் விட்ட ஆட்சியை மீண்டும் கைப்பற்ற வேண்டும் என எதிர்க்கட்சிகள் மும்முரமாக உள்ளன. அதே நேரத்தில் ஆட்சியை தக்க வைப்பதற்கான பணியில் ஈடுபட்டுள்ள பா.ஜ.க., தொகுதி பங்கீடு தொடர்பாக கூட்டணி கட்சிகளுடன் பேச்சு நடத்தி உள்ளது. இதன்படி, பா.ஜ.க. 140 முதல் 150 வரை தொகுதிகளில் போட்டியிட வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. ஏக்நாத் ஷிண்டே தரப்பு 80 தொகுதிகளிலும், அஜித்பவார் 55 தொகுதிகளிலும் போட்டியிடக்கூடும் எனவும், சிறிய கட்சிகளுக்கு 3 தொகுதிகள் ஒதுக்க முடிவு செய்யப்பட்டு உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |


