முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பஞ்சாப் பயிற்சியாளர் நியமனம்

புதன்கிழமை, 18 செப்டம்பர் 2024      விளையாட்டு
Ricky-Ponting 2023-10-17

Source: provided

பஞ்சாப் கிங்ஸ் அணியின் தலைமை பயிற்சியாளராக, ஆஸ்திரேலியா அணியின் முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங் நியமிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த 7 ஆண்டுகளாக டில்லி கேபிடல்ஸ் அணியின் தலைமை பயிற்சியாளராக இருந்த ரிக்கி பாண்டிங் அண்மையில் அந்த பதவியில் இருந்து விலகினார். ஐபிஎல் தொடரில் இதுவரை ஒருமுறை கூட கோப்பையை வெல்லாத பஞ்சாப் அணிக்கு ரிக்கி பாண்டிங்கின் வருகை உத்வேகமூட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

____________________________________________________________________

வினேஷ் போகத் கேள்வி?

பாரிஸ் ஒலிம்பிக் போட்டிகளில் 100 கிராம் உடல் எடை அதிகம் இருந்ததால் அபாரமான வெற்றிகளைப் பெற்றும் பதக்க வாய்ப்பை இழந்து தகுதி நீக்கம் செய்யப்பட்ட வினேஷ் போகத், இப்போது அரசியலில் குதித்துள்ளார்.  முன்னதாக பேட்டியில் அவர் தெரிவித்துள்ளதாவது: “நான் அரசியலில் நுழைய வேண்டாம் என்றுதான் நினைத்திருந்தேன். ஆனால், போராட்டம் என்னும் மிகப்பெரிய சவால் நம் முன் இருக்கும் போது மாற்றங்களை ஏற்படுத்த அரசியல் பலம் தேவை என்று முடிவெடுத்தேன். என்னுடைய நன்மதிப்பை நான் இழந்து விடுவேன் என்றார்கள். ஆனால், என் மீது அன்புதான் அதிகமாகியிருக்கிறது. இது கடவுளின் சங்கல்பம், நான் என் வாழ்க்கை விதியை பின் தொடர்கிறேன்.

நான் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்ற பிறகு ஒருநாள் முழுதும் அவரிடமிருந்து ட்வீட் பதிவு ஏதும் வரவில்லை. ஆனால், அவர் மற்ற அனைத்து தடகள வீரர்களையும் அழைத்தார். இந்த எடை சமாச்சாரம் அடுத்த நாள் நிகழ்ந்தது. நான் இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது குறித்து எனக்கு ஏன் ஒரு அழைப்பு கூட பிரதமரிமிடம் இருந்து வரவில்லை? காரணம் தெரிந்ததே என்று தெரிவித்துள்ளார்.

____________________________________________________________________

அஸ்வின் பிறந்தநாள் கொண்டாட்டம்

இந்திய கிரிக்கெட்டில் தலைசிறந்த சுழற்பந்து வீச்சாளர்களில் ஒருவர் ரசிச்சந்திரன் அஷ்வின். அஷ்வின் தனது 38வது பிறந்தநாளை கொண்டாடினார். அஸ்வின் இந்திய அணி வீரர்களுடன் கேக் வெட்டி தனது பிறந்தநாளை கொண்டாடினார். வங்காளதேச அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டி காரணமாக சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இந்திய அணி பயிற்சி செய்த நிலையில், அஷ்வினின் பிறந்த நாள் கொண்டாட்டம் மைதானத்தின் டிரெசிங் ரூமிலேயே நடைபெற்றது. அஷ்வின் பிறந்த நாள் கொண்டாட்ட புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 7 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 7 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 8 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 10 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 10 months ago
View all comments

வாசகர் கருத்து