எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை, வான் சாகச நிகழ்ச்சி காரணமாக சென்னை விமான நிலையத்தில் விமான இயக்கம் தாமதமாகும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது
விமானப்படை தின அணிவகுப்பு 2024 நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக பறக்கும் மற்றும் ஏரோபாட்டிக்ஸ் நிகழ்ச்சிகள் வருகிற 6-ம் தேதி சென்னை மெரினாவில் நடைபெறவுள்ளது. இதில் தமிழக கவர்னர் ஆர்.என். ரவி, முதல்வர் மு.க.ஸ்டாலின், விமானப்படை தலைவர் உள்ளிட்டோர் கலந்து கொள்ள உள்ளனர்.
இதனை முன்னிட்டு ஒத்திகைகள் நேற்று முதல் 5-ம் தேதி வரை மெரினா கடற்கரைப் பகுதியில் நடைபெறவுள்ளது. விமானப் படை அணிவகுப்பு நிகழ்ச்சியை முன்னிட்டு, இன்று முதல் வரும் 6-ம் தேதி வரை சென்னை மெரினா கடற்கரை பகுதி சிவப்பு மண்டலமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
டிரோன் உள்ளிட்ட பொருட்கள் பறக்க சென்னை மாநகர காவல்துறை தடை விதித்துள்ளது. இந்த நிலையில், வான் சாகச நிகழ்ச்சி காரணமாக சென்னை விமான நிலையத்தில் விமான இயக்கம் தாமதமாகும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது. விமான நிலைய வான்தடம் 15 நிமிடங்கள் முதல் இரண்டு மணி நேரம் வரை பல்வேறு இடைவெளிகளில் மூடப்படும் என்றும், நேற்று பிற்பகல் 1:45 முதல் 3.15 வரை வான்தடம் மூடப்படும் எனவும் அறிவிப்பு வெளியாகி உள்ளது.
மேலும் அக்டோபர் 2, 3 ,5, 6, 7 மற்றும் 8 ஆகிய தேதிகளில் கூடுதல் இடைவெளிகள் இருக்க வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது. இதனால் விமான பயண அட்டவணைகளை சரி பார்த்து பயணிகள் தங்களது பயணங்களை திட்டமிட்டுக் கொள்ளவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |


