Idhayam Matrimony

போஸ்னியாவில் கனமழை மற்றும் நிலச்சரிவு காரணமாக 16 பேர் பலி

சனிக்கிழமை, 5 அக்டோபர் 2024      உலகம்
Bosnia 2024-10-05

Source: provided

போஸ்னியா : போஸ்னியாவில்  கனமழை, வெள்ளம் மற்றும் நிலச்சரிவு காரணமாக 16 பேர் பலியாகினர். 

தென்கிழக்கு ஐரோப்பாவில் உள்ள பால்கன் தீபகற்பத்தில் உள்ள போஸ்னியா நாட்டில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இந்த மழையால் நாட்டின் பல்வேறு பகுதிகளில் வெள்ளம் மற்றும் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. இதில் 16 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் பலர் காயமடைந்துள்ளனர்.

நிலச்சரிவு காரணமாக நகரங்கள் மற்றும் கிராமங்களில் உள்ள சாலைகள் துண்டிக்கப்பட்டுள்ளன மற்றும் சில இடங்களில் வீடுகள் கிட்டத்தட்ட நீரில் மூழ்கியுள்ளன. வெள்ளம் மற்றும் நிலச்சரிவால் பலர் காணவில்லை என அறிவிக்கப்பட்டு அந்நாட்டில் அவசரகால நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. 

இதில் மாயமாகி உள்ளவர்களை தேடும் பணியில் மீட்பு படையினர் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர். கடந்த 2014-ம் ஆண்டுக்கு பிறகு போஸ்னியாவின் மிக மோசமான வெள்ளம் இதுவாகும்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 10 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 10 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 2 years 1 day ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 2 years 1 day ago
View all comments

வாசகர் கருத்து