எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Source: provided
ஜம்மு : ஜம்மு காஷ்மீரில் முதல்முறையாக சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்று ஆம் ஆத்மி கணக்கை துவங்கியுள்ளது.
ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசத்தின் 90 தொகுதிகளுக்கும் 3 கட்டங்களாக தேர்தல் நடத்தப்பட்டு இருந்தது. இதில் பதிவான வாக்குகள் நேற்று எண்ணப்பட்டு முடிவுகள் வெளியாகின. ஒருங்கிணைந்த மாநிலமாக இருந்த காஷ்மீரை 2 யூனியன் பிரதேசங்களாக பிரித்த பின்னர் நடைபெற்ற முதல் தேர்தல் என்பதால், இதன் முடிவுகள் நாடு முழுவதும் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
காங்கிரஸ் தேசிய மாநாடு கூட்டணி, மக்கள் ஜனநாயக கட்சி உள்ளிட்ட முக்கிய கட்சிகள் தீவிரமாக தேர்தலை எதிர்கொண்டன. ஜம்மு காஷ்மீரில் மொத்தம் 90 தொகுதிகளில் தேசிய மாநாட்டு கட்சி 56 இடங்களில் போட்டியிட்டது. கூட்டணியில் உள்ள காங்கிரஸ் 38 இடங்களிலும், மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு ஒரு தொகுதிலும் போட்டி யிட்டன. தேசிய மாநாட்டு கட்சி-காங்கிரஸ் கூட்டணி அதிக இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியை பிடித்துள்ளது. உமர் அப்துல்லா மீண்டும் ஜம்மு காஷ்மீர் முதல்வராகிறார்.
இந்நிலையில், தோடா தொகுதியில் போட்டியிட்ட ஆம் ஆத்மி வேட்பாளர் மெஹ்ராஜ் மாலிக் தண்னி எதிர்த்து போட்டியிட்ட பாஜக வேட்பாளர் கஜய் சிங் ராணாவை விட 4538 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றுள்ளார். இதன்மூலம் ஜம்மு காஷ்மீரில் தனது முதல் வெற்றிக்கணக்கை ஆம் ஆத்மி கட்சி தொடங்கியுள்ளது. அரவிந்த் கெஜ்ரிவாலின் சொந்த மாநிலமான அரியானாவில் ஒரு இடத்தை கூட வெல்லமுடியாத ஆம் ஆத்மி கட்சி ஜம்மு காஷ்மீரில் முதல்முறையாக ஒரு தொகுதியை வென்று அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 5 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 5 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |
-
வார ராசி பலன்கள்
14 Mar 2026


