முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சேலம், கோவை உள்ளிட்ட மாவட்டங்களில் ரூ.1,843 கோடி செலவில் புதிதாக அமைக்கப்பட்ட 11 சாலைகள்: முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்

வெள்ளிக்கிழமை, 13 மார்ச் 2026      தமிழகம்
CM-1-2026-03-13

சென்னை, தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் நேற்று (13.03.2026) தலைமைச் செயலகத்தில், நெடுஞ்சாலைத் துறை சார்பில் சேலம், நாமக்கல், கோயம்புத்தூர், திருவண்ணாமலை, திருப்பூர் மற்றும் திருவாரூர் ஆகிய மாவட்டங்களில் 1,843 கோடியே 85 லட்சம் ரூபாய் செலவில் அமைக்கப்பட்டுள்ள 11 சாலைகளை பொதுமக்கள் பயன்பாட்டிற்காக திறந்து வைத்தார்.

இதுகுறித்து தமிழ்நாடு அரசின் செய்தி குறிப்பில் தெரிவித்திருப்பதாவது., சேலம் மற்றும் நாமக்கல் மாவட்டங்களில் 985 கோடியே 18 லட்சம் ரூபாய் செலவில் கொங்கணாபுரம் நகருக்கு புறவழிச்சாலை உட்பட 36.395 கி.மீ நீளத்திற்கு நான்கு வழிச்சாலையாக மேம்படுத்தப்பட்ட ஓமலூர் – சங்ககிரி – திருச்செங்கோடு – பரமத்தி சாலை; நாமக்கல் மாவட்டத்தில் முதல்-அமைச்சரின் சாலை மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் 59 கோடியே 15 லட்சம் ரூபாய் செலவில் 9.15 கி.மீ நீளத்திற்கு நான்கு வழிச்சாலையாக அகலப்படுத்தி மேம்படுத்தப்பட்ட ஓமலுர்-சங்ககிரி-திருசெங்கோடு-பரமத்தி சாலை மற்றும் 65 கோடியே 48 லட்சம் ரூபாய் செலவில் 6.2 கி.மீ நீளத்திற்கு 10 மீட்டர் அகல இரு வழிச்சாலையாக திருச்செங்கோடு நகருக்கு புதியதாக அமைக்கப்பட்டுள்ள புறவழிச் சாலை (கட்டம் –I) முதல்வர் திறந்து வைத்தார்.

கோயம்புத்தூர் மாவட்டத்தில் 250 கோடி ரூபாய் செலவில் 11.8 கி.மீ நீளத்திற்கு நான்கு வழிச்சாலையாக புதியதாக அமைக்கப்பட்டுள்ள கோயம்புத்தூர் மேற்கு சுற்றுவட்டசாலை மற்றும் 73 கோடியே 35 லட்சம் ரூபாய் செலவில் 8.9 கி.மீ நீளத்திற்கு ஜமீன் -ஊத்துக்குளி (மா.சா.எண்.19) மற்றும் ஆச்சிபட்டி (தே.நெ.எண்:83) - ஐ இணைக்கும் வகையில் 10 மீட்டர் அகல இரு வழிச்சாலையாக அமைக்கப்பட்டுள்ள பொள்ளாச்சி மேற்கு புறவழிச்சாலை; திருவண்ணாமலை மாவட்டத்தில் 90 கோடி ரூபாய் செலவில் 3 கி.மீ நீளத்திற்கு திருவத்திபுரம் புறவழிச்சாலை உட்பட 7.4 கி.மீ நீளத்திற்கும், 59 கோடி ரூபாய் செலவில் 9 கி.மீ நீளத்திற்கும் நான்கு வழிச்சாலையாக அகலப்படுத்தி உறுதிபடுத்தப்பட்ட ஆற்காடு - திண்டிவனம் சாலை மற்றும் 50 கோடி ரூபாய் செலவில் 5.6 கி.மீ நீளத்திற்கும் நான்கு வழிச்சாலையாக அகலப்படுத்தி உறுதிப்படுத்தப்பட்ட காஞ்சிபுரம் - வந்தவாசி சாலையை முதல்வர் திறந்து வைத்தார்.

திருப்பூர் மாவட்டத்தில் 87 கோடியே 69 லட்சம் ரூபாய் செலவில் 13.49 கி.மீ நீளத்திற்கும் நான்கு வழிச்சாலையாக அகலப்படுத்தி உறுதிபடுத்தப்பட்ட பழனி - தாராபுரம் சாலை; திருவாரூர் மாவட்டத்தில் 68 கோடி ரூபாய் செலவில் 5.61 கி.மீ நீளத்திற்கும் (கட்டம்-1, பகுதி-A) மற்றும் 56 கோடி ரூபாய் செலவில் 6.29 கி.மீ நீளத்திற்கும் (கட்டம்-1, பகுதி-B) என இருப்பகுதிகளாக மன்னார்குடி - திருமாக்கோட்டை - சொக்கணாவூர் சாலை மற்றும் தஞ்சாவூர் - மன்னார்குடி - திருத்துறைப்பூண்டி - வேதாரண்யம் - கோடியக்கரை சாலையை இணைக்கும் வகையில் இரு வழிச்சாலையாக புதியதாக அமைக்கப்பட்டுள்ள மன்னார்குடி சுற்றுவட்ட சாலை; என மொத்தம் 1843 கோடியே 85 லட்சம் ரூபாய் செலவில் அமைக்கப்பட்டுள்ள 11 சாலைகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று திறந்து வைத்தார். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 9 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 11 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 11 months ago
View all comments

வாசகர் கருத்து