முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

புயல் மழையால் திருப்பதியில் இன்று வி.ஐ.பி தரிசனம் ரத்து

செவ்வாய்க்கிழமை, 15 அக்டோபர் 2024      ஆன்மிகம்
Tirupati 2023 03 30

திருப்பதி, புயல் மழை காரணமாக திருப்பதி ஏழுமலையான் கோவிலில் இன்று வி.ஐ.பி. பிரேக் தரிசனம் ரத்து செய்யப்பட்டுள்ளது.

ஆந்திராவில் தென் கடலோரம், ராயலசீமா, கர்னூல், சித்தூர், திருப்பதி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் பலத்த மழை பெய்யக் கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மணிக்கு 55 கிலோ மீட்டர் வேகத்தில் புயல் காற்று வீசப்படும் என்பதால் மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்கச் செல்ல கூடாது என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

புயல் கரையை கடந்த பிறகு அரபிக் கடலில் நகர்ந்து மீண்டும் வலுப்பெறும் என்பதால் ஆந்திராவில் பள்ளி கல்லூரிகளுக்கு  நாளை  வரை  விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. 

திருப்பதியில் அதிக அளவு மழை பெய்ய வாய்ப்பு உள்ளதால் ஏழுமலையான் கோவிலில் இன்று வி.ஐ.பி. பிரேக் தரிசனம் ரத்து செய்யப்பட்டுள்ளது. வி.ஐ.பி பிரேக் தரிசன பரிந்துரை கடிதங்களை ஏற்க முடியாது என தெரிவித்துள்ளனர்.

திருப்பதியில் நேற்று முன்தினம் 75,361 பேர் தரிசனம் செய்தனர். 28,850 பக்தர்கள் முடி காணிக்கை செலுத்தினர். ரூ.3.91 கோடி உண்டியல் காணிக்கை வசூலானது. நேரடி இலவச தரிசனத்தில் வந்த பக்தர்கள் 20 மணி நேரம் காத்திருந்து தரிசனம் செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து