எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
ஐதராபாத், ஐதராபாத்தில் வசித்து வந்த பார்வையற்ற தம்பதி, மகன் உயிரிழந்தது தெரியாமல் 4 நாட்களாக அவரிடம் உணவும், தண்ணீரும் கேட்டபடி இருந்துள்ளனர். ஆனால், அவர்களுக்கு எந்தவித பதிலும் வரவில்லை.
தெலுங்கானாவின் ஐதராபாத் நகரில் உள்ள பார்வையற்றவர்களுக்கான காலனியில் 60 வயதுடைய கணவன், மனைவி தங்களுடைய 30 வயது இளைய மகனுடன் வசித்து வந்துள்ளனர். இந்நிலையில், அவர்களுடைய வீட்டில் இருந்து சில நாட்களாக துர்நாற்றம் வீசியது. இதனால், அக்கம் பக்கத்தில் வசிப்பவர்கள் போலீசிடம் தகவல் தெரிவித்து உள்ளனர்.
இதனை தொடர்ந்து, நகோல் காவல் நிலைய போலீசார் சம்பவ பகுதிக்கு சென்று சோதனையிட்டனர். அப்போது, அந்த வீட்டில் அந்த தம்பதியின் மகன் உயிரிழந்து கிடந்தது தெரிய வந்துள்ளது. 4 நாட்களுக்கு முன் தூக்கத்தில் இருந்தபோது அவர் உயிரிழந்து உள்ளார் என தெரிகிறது. அவருடைய உடல் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டு உள்ளது.
இதுபற்றி உயரதிகாரி சூர்யா நாயக் கூறும்போது, மகன் உயிரிழந்தது பற்றி, பார்வையற்ற தம்பதிக்கு எதுவும் தெரிய வரவில்லை. அவர்கள், மகனிடம் உணவும், தண்ணீரும் கேட்டபடி இருந்துள்ளனர். ஆனால், அவர்களுக்கு எந்தவித பதிலும் வரவில்லை. இதனால் வயது முதிர்ந்த அந்த தம்பதி உணவின்றி 4 நாட்களாக பரிதவித்து வந்துள்ளனர். அதனுடன், அவர்களால் சரியாக பேச முடியவில்லை. உடனடியாக அவர்கள் மீட்கப்பட்டு உணவும், தண்ணீரும் கொடுக்கப்பட்டு உள்ளது என்று போலீசார் தெரிவித்தனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 7 months ago |


