எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Source: provided
மதுரை : இலங்கை கடற்படையால் கைது செய்யப்படும் தமிழக மீனவர்களுக்கு தேவையான சட்ட உதவிகள் வழங்கப்படுவதாக ஐகோர்ட் மதுரைக் கிளையில் மத்திய அரசு தெரிவித்துள்ளது.
ராமநாதபுரம் மாவட்டம் உப்பூரைச் சேர்ந்த திருமுருகன், ஐகோர்ட் மதுரை அமர்வில் தாக்கல் செய்த மனுவில்,
ஒவ்வொரு நாளும் இலங்கை கடற்படையினரால் தமிழக மீனவர்கள் தாக்கப்படுவதும், கைது செய்யப்படுவதும் தொடர்கதையாகி வருகிறது. கடந்த 9-ம் தேதி மீன்பிடித்துக் கொண்டிருந்த கோட்டைப்பட்டினம் பகுதியைச் சேர்ந்த 21 மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் சட்டவிரோதமாக கைது செய்யப்பட்டுள்ளனர்.
அவர்களது நான்கு மோட்டார் படகுகளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. தங்களின் வாழ்வாதாரத்தை நடத்துவதற்காக மீன்பிடிக்கச் செல்லும் மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்படுவதால் மிகுந்த சிரமத்துக்கு ஆளாகியுள்ளனர். இந்த ஆண்டு மட்டும் 450 மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். 61 படகுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
இது கடலோர காவல்துறையினரின் பொறுப்பற்ற தன்மையையே காட்டுகிறது. கைது செய்யப்பட்ட மீனவர்கள் இந்திய கடல் எல்லை பகுதிக்குள்தான் மீன் பிடித்துள்ளனர். அவர்களை கைது செய்தது சட்டவிரோதமானது. பிற மாநிலங்களைச் சேர்ந்த மீனவர்கள் தாக்கப்படும்போது மத்திய அரசு உடனடியாக தலையிட்டு நடவடிக்கை எடுக்கிறது. ஆனால், தமிழக மீனவர்கள் கைது செய்யப்படுகையில் ஒருதலைபட்சமாகவே செயல்படுகிறது.
எனவே, இலங்கை சிறையில் உள்ள தமிழக மீனவர்களுக்கு சட்ட உதவிகள் வழங்குவதோடு, அவர்களை விடுதலை செய்யவும், அவர்களின் படகுகளை விடுவிக்கவும் உரிய நடவடிக்கை எடுக்க மத்திய, மாநில அரசுகளுக்கு உத்தரவிட வேண்டும் எனக் கூறியிருந்தார்.
இந்த மனு தலைமை நீதிபதி ஸ்ரீராம், நீதிபதி முகமது சபீக் அமர்வு முன்பாக நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது மத்திய அரசு தரப்பில்,
இலங்கை நீதிமன்றத்தில் மீனவர்களுக்கான சட்ட உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன. தொடர்ச்சியாக தூதரகம் மூலமாகவும் வலியுறுத்தப்பட்டு வருகிறது. அரசியல் நோக்கில் இந்த வழக்கு தொடரப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து, மனுதாரர் தரப்பில் மனுவை திரும்பப் பெறுவதாக தெரிவிக்கப்பட்டது. அதற்கு அனுமதி வழங்கி மனுவை தள்ளுபடி செய்து தலைமை நீதிபதி அமர்வு உத்தரவிட்டது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 5 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 5 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |
-
வி.சி.க.வுக்கு எத்தனை தொகுதிகள்? முதல்வர் மு.க. ஸ்டாலினுடன் திருமாவளவன் சந்தித்து பேச்சு
14 Mar 2026சென்னை, வி.சி.க.வுக்கு தொகுதி உடன்பாடு குறித்து முதல்வர் ஸ்டாலினுடன் திருமாவளவன் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர்.
-
கரூர் விவகாரம் தொடர்பாக சி.பி.ஐ. விசாரணைக்கு நேரில் ஆஜராக டெல்லி சென்றார் விஜய்
14 Mar 2026கரூர், கரூர் பலி விவகாரத்தில் சி.பி.ஐ. விசாரணைக்கு ஆஜராக த.வெ.க. தலைவர் விஜய் டெல்லி புறப்பட்டுச் சென்றார்.
-
தமிழ்நாட்டில் வணிக சிலிண்டர் தட்டுப்பாடு எதிரொலி: உணவகங்கள், டீக்கடைகளுக்கு மின் கட்டணத்தில் யூனிட்டிற்கு ரூ.2 சலுகை : முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான ஆலோசனை கூட்டத்தில் முடிவு
14 Mar 2026வணிக சிலிண்டர் தட்டுப்பாடு காரணமாக அனைத்து உணவகங்கள், டீக்கடைகளுக்கு மின் கட்டணத்தில் யூனிட்டிற்கு ரூ.2 சலுகை மின்சார மானியமாக வழங்கப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்
-
வைரமுத்துவுக்கு ஞானபீட விருது: முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து
14 Mar 2026சென்னை, கவிப்பேரரசைத் தமிழ்நாடே வாழ்த்துகிறது என்று ஞானபீட விருது அறிவிக்கப்பட்டள்ள வைரமுத்துவுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
-
கிரெடிட் கார்டு விதிமுறைகளில் புதிய நடைமுறை கடைபிடிப்பு ஆர்.பி.ஐ. அறிவிப்பால் மறைமுக வட்டி, அபராதங்கள் இனி இல்லை
14 Mar 2026மும்பை, கிரெடிட் கார்டு விதிமுறைகளை ஆர்.பி.ஐ. புதுப்பித்துள்ளது. எனவே, இனி மறைமுக வட்டி, அபராதங்கள் விதிக்கப்படுவது தவிர்க்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.
-
நெல் கொள்முதல் அளவிற்கான இலக்கை உயர்த்திட வேண்டும்: 32 லட்சம் மெட்ரிக் டன்களாக மாற்றியமைக்க பிரதமர் மோடிக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்
14 Mar 2026சென்னை, கரீப் பருவத்தில் 2025-2026 ஆண்டிற்கான தமிழ்நாட்டின் அரிசி கொள்முதல் இலக்கை முன்னுரிமை அடிப்படையில் 16 லட்சம் டன்களிலிருந்து 32 லட்சம் மெட்ரிக் டன்களாகத் மாற்றிய


