முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தேர்தல் வியூகத்திற்கு பிரசாந்த் கிஷோர் பெற்ற சம்பளம் எவ்வளது தெரியுமா?

சனிக்கிழமை, 2 நவம்பர் 2024      இந்தியா
Prashant-Kishore 2024-11-02

Source: provided

பாட்னா : ஒரு தேர்தலில் நான் ஒருவருக்கு அறிவுரை கூறினால், எனது கட்டணம் ரூ. 100 கோடி என தேர்தல் வியூக நிபுணர் பிரசாந்த் கிஷோர் தெரிவித்தார்.

பீகாரை சேர்ந்தவர் பிரசாந்த் கிஷோர். அரசியல் ஆலோசகரான இவர் பல்வேறு கட்சிகளுக்கு தேர்தல் வியூகங்களை வகுத்து கொடுத்துள்ளார். பா.ஜ., காங்கிரஸ், திரிணமுல், தி.மு.க., உள்ளிட்ட வெவ்வேறு கட்சிகளுக்கு தேர்தல் வியூக வகுப்பாளராக இருந்தவர். இவர் 'ஜன் சுராஜ்' என்ற பெயரில் கட்சி தொடங்கி அரசியலில் ஈடுபட்டு வருகிறார்.

பீகாரில் நடக்கவிருக்கும் இடைத்தேர்தலுக்கான பிரசாரத்தின் போது தேர்தல் வியூகவாதியாக தனது சம்பளத்தை பிரசாந்த் கிஷோர் வெளிப்படுத்தினார். பெலகஞ்சில் நடந்த ஒரு நிகழ்வில், அவர் பேசியதாவது:என்னுடைய பிரசாரத்திற்கு கூடாரங்கள் மற்றும் நிழற்குடைகள் அமைக்க என்னிடம் போதிய பணம் இருக்காது என்று நினைக்கிறீர்களா? நான் பலவீனமானவன் என்று நினைக்கிறீர்களா?

தேர்தலுக்கு ஒருவருக்கு நான் ஆலோசனை கூறினால் எனக்கு கிடைக்கும் சம்பளம் பற்றி நீங்கள் கேள்விப்பட்டிருக்க மாட்டீர்கள். ஒரு தேர்தலில் நான் ஒருவருக்கு அறிவுரை கூறினால், எனது கட்டணம் ரூ. 100 கோடி. இதுபோன்ற ஒரே ஒரு தேர்தலுக்கு நான் ஆலோசனை கூறினால் எனது பிரசாரத்திற்கு செலவு செய்ய முடியும். இவ்வாறு பிரசாந்த் கிஷோர் பேசினார். தன் சம்பளத்தைப்பற்றி பிரசாந்த் கிஷோர் வெளிப்படையாக பேசியிருப்பது, கடந்த காலங்களில் அவரை வியூக ஆலோசகராக பணியில் அமர்த்திய தி.மு.க., திரிணமுல் காங்கிரஸ் உள்ளிட்ட அரசியல் கட்சிகளுக்கு சிக்கலை ஏற்படுத்தும் வாய்ப்புள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 4 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 4 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 5 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 5 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 7 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 7 months ago
View all comments

வாசகர் கருத்து