முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

முடிச்சூர் ஆம்னி பேருந்து நிலையத்தின் பணிகள் 95 சதவீதம் நிறைவு: அமைச்சர் சேகர்பாபு

சனிக்கிழமை, 2 நவம்பர் 2024      தமிழகம்
Shekhar-Babu 2024-08-27

Source: provided

சென்னை : ரூ.42 கோடி செலவில் முடிச்சூரில் கட்டப்பட்டு வரும் ஆம்னி பேருந்து நிலையத்தின் 95 சதவீதம் பணிகள் நிறைவுற்றுன. பேருந்து நிலையம் விரைவில் தமிழக முதல்வரால் திறந்து வைத்து மக்களின் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படும்,” என்று அமைச்சர் சேகர்பாபு கூறியுள்ளார்.

தமிழக அரசின் சார்பில் நடத்தப்படுகிற போக்குவரத்து துறை, பொருளாதாரத்தில் பின்தங்கிய மக்களுக்கு உதவுவதற்காக தொடங்கப்பட்டது. அந்தவகையில், தமிழக முதல்வர் ஆட்சிப் பொறுப்பேற்றப் பிறகு, ஏற்கெனவே பயன்பாட்டில் இருந்த மாதவரம் பேருந்து நிலையம், விழாக்காலங்களில் அதிகமான பயணிகள் பயன்படுத்துகிற பேருந்து நிலையமாக இருந்து வருகிறது. அதேபோல், கிளாம்பாக்கம் பேருந்து நிலையம், அதிமுக ஆட்சியில் பணிகள் தொடங்கப்பட்டிருந்தாலும், திட்டமிடுதல் இல்லாமல் இருந்தது.

புதிதாக பொறுப்பேற்ற திராவிட மாடல் அரசு, பயணிகளுடைய பல்வேறு தேவைகளை கேட்டறிந்து அனைத்து தேவைகளையும் முழுமையாக நிறைவேற்றி வருகிறது. வரும்காலங்களில், அந்த பேருந்து நிலையத்தின் பயன்பாடு அதிகமாக இருக்கும் என்பதை அரசு முன்கூட்டியே கணக்கிட்டு கூடுதலாக தேவைப்படுகிற கட்டமைப்புகளை உருவாக்குகிற பணியில், இந்த ஆட்சி முழுமையாக ஈடுபட்டிருக்கிறது.

அந்த வகையில், ஆம்னி பேருந்து நிலையம் ஒன்று புதிதாக கட்டப்பட வேண்டும் என்பதை திட்டமிட்டு , ரூ.42 கோடி செலவில் முடிச்சூரில் ஆம்னி பேருந்து நிலையம் 95 சதவீதம் பணிகள் நிறைவுற்று விரைவில் தமிழக முதல்வரால் திறந்து வைத்து மக்களின் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படும். கூத்தம்பாக்கம் பேருந்து நிலையம் கட்டமைப்புகள் முடிக்கப்பட்டு மார்ச் மாதத்தில், அந்த பேருந்து நிலையம் மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வருவதற்கான அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டு வருகிறோம் என்று அவர் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 3 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 5 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 5 months ago
View all comments

வாசகர் கருத்து