முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வங்காளதேச அணி அறிவிப்பு

சனிக்கிழமை, 2 நவம்பர் 2024      விளையாட்டு
Bangladesh 2024-09-02

Source: provided

வங்காளதேசம் - ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையிலான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் ஷார்ஜாவில் நடைபெற உள்ளது. இந்த தொடர் வரும் 6ம் தேதி முதல் 11ம் தேதி வரை நடைபெறுகிறது. இந்த தொடரின் போட்டிகள் முறையே நவம்பர் 6, 9, 11 ஆகிய தேதிகளில் நடைபெறுகிறது. இந்நிலையில், இந்த தொடருக்கான வங்காளதேச அணி அறிவிக்கப்பட்டுள்ளது. தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கு பின் கேப்டன் பதவியில் இருந்து ஷாண்டோ விலக உள்ளதாக தகவல் வெளியாகி இருந்தது.

ஆனால், ஆப்கானிஸ்தானுக்கு எதிரான ஒருநாள் தொடருக்கான வங்காளதேச அணி ஷாண்டோ தலைமையில் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், மெஹதி ஹசன் மிராஸ் துணை கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். வங்காளதேச அணி விவரம்; சவுமியா சர்கார், தன்சித் ஹசன் தமீம், ஜாகிர் ஹசன்ம் நஜ்முல் ஹொசைன் ஷாண்டோ (கேப்டன்), முஷ்பிகுர் ரஹீம், மஹ்மத்துல்லா ரியாத், தவ்ஹித் ஹிரிடோய், ஜேக்கர் அலி அனிக், மெஹதி ஹசன் மிராஸ் (துணை கேப்டன்), ரிஷாத் ஹொசைன், நசும் அகமது, தஸ்கின் அகமது, முஸ்தாபிசுர் ரஹ்மான், ஷோரிபுல் இஸ்லாம், நஹித் ராணா.

____________________________________________________________________________

ஸ்ரேயாஸை விடுவிக்க காரணம்?

ஐ.பி.எல்.போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் தலைமை செயல் அதிகாரி வெங்கி மைசூர் ஸ்ரேயாஸ் விடுவிக்கப்பட்டது குறித்து விளக்கம் அளித்தார். ஸ்ரேயாஸ் ஐயரை தாங்கள் நீக்கவில்லை என்றும், அவர் தனது சந்தை மதிப்பை அறிய ஏலத்தில் பங்கேற்க விரும்பினார் என்றும் கூறி இருக்கிறார். இது பற்றி வெங்கி மைசூர் பேசுகையில், "எங்கள் அணியின் தக்க வைப்பு வீரர்கள் பட்டியலில் ஸ்ரேயாஸ் ஐயர் முதல் இடத்தில் இருந்தார். ஆனால், இந்த முடிவுகள் ஒரு வழிப்பாதை அல்ல. ஒரு அணி மட்டுமே எந்தெந்த வீரர்களை தக்க வைக்கலாம் என்று முடிவை எடுக்க முடியாது. 

அந்த வீரர் அணியில் நீடிக்க விரும்புகிறாரா? என்பதையும் பார்க்க வேண்டும். எங்கள் பட்டியலில் ஸ்ரேயாஸ் ஐயர் முதல் இடத்தில் இருந்தார். அவர்தான் எங்கள் அணியின் கேப்டனாகவும் இருந்தார். அவர் கேப்டனாக இருக்க வேண்டும் என்பதால்தான் அவரை நாங்கள் 2022ல் வாங்கினோம். ஆனால், சில விஷயங்கள் நமது கட்டுப்பாட்டில் இல்லை. ஒரு வீரர் தனது சந்தை மதிப்பை அறிய விரும்பினால் ஏலத்தில் பங்கேற்பது சரியான விஷயமாக இருக்கும். அதை அவர் செய்வதும் சரியான விஷயம்தான். எங்கள் வீரர்கள் அவர்களுக்கு வேண்டிய முடிவை எடுப்பதை நாங்கள் ஆதரிக்கிறோம்" என்று கூறினார்.

____________________________________________________________________________

அஜாஸ் படேல் புதிய சாதனை 

இந்தியா-நியூசிலாந்து அணிகள் இடையிலான 3-வது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி மும்பை வான்கடே ஸ்டேடியத்தில் தொடங்கி நடைபெற்று வருகிறது.. இதில் அஜாஸ் படேல் கைப்பற்றிய 5 விக்கெட்டுகளையும் சேர்த்து மும்பை மைதானத்தில் இதுவரை 19 விக்கெட்டுகள் வீழ்த்தியுள்ளார். இதன் மூலம் இந்திய மண்ணில் குறிப்பிட்ட ஒரு மைதானத்தில் அதிக விக்கெட்டுகள் கைப்பற்றிய 2-வது வெளிநாட்டு வீரர் என்ற மாபெரும் சாதனையை அஜாஸ் படைத்துள்ளார்.

அந்த பட்டியல் வருமாறு., 1. இயன் போத்தம் - 22 விக்கெட்டுகள் - வான்கடே மைதானம், 2. அஜாஸ் படேல் - 19 விக்கெட்டுகள் - வான்கடே மைதானம், 3. ரிச்சி பெனாட் - 18 விக்கெட்டுகள் - ஈடன் கார்டன் மைதானம், 4. கோர்ட்னி வால்ஷ் - 17 விக்கெட்டுகள் - வான்கடே மைதானம்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 3 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 5 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 5 months ago
View all comments

வாசகர் கருத்து