எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Source: provided
சென்னை : டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளி பட்டியலில் முதலிடத்தில் இருந்த இந்திய அணி 2-வது இடத்திற்கு சரிந்துள்ள நிலையில், உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கு முன்னேற இந்திய அணி என்ன செய்ய வேண்டும் என்ற விவரம் வெளியாகியுள்ளது.
ஆஸி. முதலிடம்...
இந்தியா - நியூசிலாந்து இடையிலான 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நிறைவடைந்துள்ளது. இதில் 3 போட்டிகளிலும் தோல்வியடைந்த இந்திய அணி சில புள்ளிகளை இழந்த நிலையில் உலக டெஸ்ட் சாம்பினஷிப் புள்ளி பட்டியலில் முதலிடத்தை இழந்துள்ளது. ஆஸ்திரேலிய அணி (62.50 சதவீத புள்ளி) முதலிடத்துக்கு முன்னேறியது. இலங்கை (55.56) 3-வது இடத்தில் நீடிக்கிறது. இந்தியாவுக்கு எதிரான கடைசி ஆட்டத்தில் வெற்றி பெற்ற நியூசிலாந்து (54.55) அணி ஒரு இடம் முன்னேறி 4-வது இடத்தை பிடித்துள்ளது. தென்ஆப்பிரிக்கா (54.17) 5-வது இடத்துக்கு இறங்கியது. முதல் 5 இடங்களில் இருக்கும் அணிகள் டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கான ரேசில் உள்ளன.
முன்னேற சிக்கல்...
இதனால் நியூசிலாந்துக்கு எதிரான தொடரில் ஒயிட்வாஷ் ஆன இந்திய அணிக்கு இறுதிப்போட்டிக்கு முன்னேற சிக்கல் எழுந்துள்ளது. இருப்பினும் இந்திய அணி அடுத்ததாக நடைபெறும் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான பார்டர் - கவாஸ்கர் கோப்பை தொடரில் 4-1 என்ற கணக்கில் வெற்றி பெறும் பட்சத்தில் எந்த வித சிக்கலுமின்றி இறுதிப்போட்டிக்கு முன்னேறும். மாறாக இந்தியா 3-2 என்ற கணக்கில் கைப்பற்றினால் மற்ற அணிகளின் முடிவுக்காக காத்திருக்க வேண்டிவரும். ஆனால் இரண்டிற்கு மேற்பட்ட போட்டிகளில் தோல்வியை தழுவினால் நிச்சயம் வெளியேற நேரிடும் என்பது குறிப்பிடத்தக்கது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 7 months ago |


