முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நகுல் நடிக்கும் தி டார்க் ஹெவன்

செவ்வாய்க்கிழமை, 5 நவம்பர் 2024      சினிமா
Nakul 2024-11-05

Source: provided

டீம் பி புரொடக்ஷன் ஹவுஸ் சார்பில் தயாராகும் தி டார்க் ஹெவன் படத்தை பாலாஜி இயக்குகிறார். சஸ்பென்ஸ் திரில்லர் கதையம்சம் கொண்ட இப்படத்தின் டைட்டில் லுக்கை சமீபத்தில் சசிகுமார், பரத் ,சிபிராஜ் ஆகியோர் வெளியிட்டனர்.

இந்நிலையில் தி டார்க் ஹெவன் படக்குழுவினர் தங்களின் பட அனுபவங்களை செய்தியாளர்களிடம் பகிர்ந்து கொண்டனர்.  அப்போது பேசிய நகுல், எனக்குச் சின்ன வயதில் இருந்து ராணுவத்தில் சேர வேண்டும் என்று ஆசை. காக்கி உடை மீது எனக்கு ஒரு காதல் உண்டு. நான் நடிக்க வந்து 20 ஆண்டு ஆகிவிட்டது. ஆனால் நான் எதையுமே செய்யாதது போல் இருக்கிறது.

இப்போதுதான் ஆரம்பித்தது போல் இருக்கிறது. நான் எந்த ஒரு யோசனையும் இல்லாமல் தான் நடிக்க வந்தேன். இப்படி நடிக்க வேண்டும் அப்படி நடிக்க வேண்டும் என்றெல்லாம் கனவு அப்போது இல்லை. படிப்படியாக இப்போது 20 ஆண்டுகளை கடந்து விட்டேன் என்றார்.

இப்படத்திற்கு மணிகண்டன் பி.கே. ஒளிப்பதிவு செய்ய, சக்தி பாலாஜி இசையமைக்கிறார். தமிழ், தெலுங்கு, ஆங்கிலம், இந்தி என்று பல மொழிகளில் உருவாகி வரும் இந்தப் படம் விரைவில் வெளியாக உள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து