முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வயநாட்டிற்கு சேவை செய்ய விருப்பம்: பிரியங்கா காந்தி

வியாழக்கிழமை, 7 நவம்பர் 2024      இந்தியா      அரசியல்
Priyanka-Gandhi 2023-06-08

வயநாடு, அம்மா குழந்தைகளை பார்த்துக் கொள்வது போல் வயநாட்டு மக்களுக்கு பணியாற்ற விருப்பம் என நேற்று நடந்த பிரச்சாரத்தின் போது பிரியங்கா காந்தி தெரிவித்தார். 

வயநாடு மக்களவை தொகுதி இடைத் தேர்தல் வருகிற 20-ம் தேதி நடைபெறுகிறது. ஐக்கிய ஜனநாயக முன்னணி சார்பில் பிரியங்கா காந்தி போட்டியிடுகிறார். நேரடியாக முதன்முறையாக அரசியலில் களம் இறங்கியுள்ள பிரியங்கா காந்தியை அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற வைக்க காங்கிரஸ் கட்சி தலைவர்கள் முடிவு செய்துள்ளனர்.

இதுவரை மற்ற தலைவர்களுக்காக பிரச்சாரம் மேற்கொண்ட பிரியங்கா காந்தி முதன்முறையாக அவருக்கு தீவிர பிரசாரம் மேற்கொண்டு வருகிறார். ஏற்கனவே முதற்கட்ட தேர்தல் பிரச்சாரத்தை நிறைவு செய்துள்ள அவர், தற்போது 2-ம் கட்ட தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார்.

இந்த நிலையில் நேற்று நடந்த 2-வது கட்ட  கடைசி நாள் பிரச்சாரத்தில் வயநாட்டு மக்களுக்கு அம்மா குழந்தைகளை பார்த்துக் கொள்வது போல் பணியாற்ற விருப்பம் எனத் தெரிவித்துள்ளார்.அத்துடன் எனக்கு வாய்ப்பு வழங்கினால் வயநாட்டு மக்களுக்காக பாராளுமன்றத்தில் மட்டுமல்ல, ஒவ்வொரு தளத்திலும் போராடுவேன். 

எங்கள் குடும்பத்தின் மீது காட்டிய பாசம் மற்றும் ஆதரவிற்காக வயநாடு மக்களுக்கு உதவ முடியும். பா.ஜ.க. தலைமையிலான பா.ஜ.க. அரசால் விவசாயிகள், சிறு தொழில் உரிமையாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர் எனக் கூறினார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 3 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 5 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 5 months ago
View all comments

வாசகர் கருத்து