முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இஸ்ரேல் வான்வழி தாக்குதல்: லெபனானில் 12 பேர் பலி

சனிக்கிழமை, 9 நவம்பர் 2024      உலகம்
Lebanon 2024-11-01

பெய்ரூட், கிழக்கு மற்றும் தெற்கு லெபனானில் இஸ்ரேல் ராணுவம் நடத்திய வான்வழி தாக்குதலில் 12 பேர் உயிரிழந்தனர். மேலும் இதில் 10 பேர் படுகாயமடைந்தததாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

இஸ்ரேல் - ஹமாஸ் இடையேயான போரில் ஹமாஸ் ஆயுதக்குழுவினருக்கு ஏமனில் செயல்பட்டு வரும் ஹவுதி கிளர்ச்சியாளர்களும், லெபனானில் செயல்பட்டு வரும் ஹிஸ்புல்லா அமைப்பினரும் ஆதரவு அளித்து வருகின்றனர். குறிப்பாக, லெபனானில் செயல்பட்டு வரும் ஹிஸ்புல்லா அமைப்பினர் இஸ்ரேல் மீது தொடர்ந்து ராக்கெட் தாக்குதல்களை நடத்தி வருகின்றனர்.

இதற்கு பதிலடியாக இஸ்ரேல் ராணுவம் லெபனானில் தனது தாக்குதலை தீவிரப்படுத்தியுள்ளது. இந்த நிலையில், கிழக்கு மற்றும் தெற்கு லெபனானில் உள்ள நகரங்களின் மீது இஸ்ரேல் ராணுவம் நடத்திய வான்வழி தாக்குதலில் 12 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 10 பேர் படுகாயமடைந்துள்ளதாகவும் அந்நாட்டு ஊடகங்களில் செய்தி வெளியாகியுள்ளது. இந்த தாக்குதலில் சுகாதாரத்துறை அதிகாரி ஒருவரும் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 3 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 5 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 5 months ago
View all comments

வாசகர் கருத்து