எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Source: provided
சென்னை : அ.தி.மு.க. கள ஆய்வுக்குழு தாக்கல் செய்ய உள்ள ஆய்வு அறிக்கை வெளிப்படை தன்மையுடன் இருக்க வேண்டும் என்று அக்கட்சியின் பொதுச் செயலாளர் பழனிசாமி அறிவுறுத்தியுள்ளார்
அ.தி.மு.க. கிளை, வார்டு, வட்டக் கழகங்கள் மற்றும் சார்பு அமைப்புகளின் பணிகள், செயல்பாடுகள் குறித்து நேரடியாக கள ஆய்வு செய்ய `கள ஆய்வுக் குழு’ ஒன்றை கட்சியின் பொதுச்செயலாளர் பழனிசாமி கடந்த வாரம் நியமித்தார். அதன்படி, கட்சியின் பல்வேறு நிலைகளில் உள்ள கட்டமைப்புகளின் பணிகளை மேம்படுத்துவது குறித்தான கருத்துகளைப் பெற்றிடவும், புதுப்பிக்கப்பட்ட கட்சி உறுப்பினர் உரிமைச் சீட்டுகள் முழுமையாக கட்சி உறுப்பினர்கள் அனைவரிடமும் சென்றடைந்ததா என்பதை மாவட்ட வாரிய சென்று கள ஆய்வு செய்து, அதன் விவரங்களை அறிக்கையாக டிச.7ம் தேதிக்குள் அளிக்கவும் `கள ஆய்வுக் குழு’வுக்கு பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.
இக்குழுவில் முன்னாள் அமைச்சர்களான கட்சியின் துணைப் பொதுச்செயலாளர்கள் கே.பி.முனுசாமி, நத்தம் விஸ்வநாதன், பொருளாளர் திண்டுக்கல் சீனிவாசன், தலைமை நிலைய செயலாளர் எஸ்.பி.வேலுமணி, அமைப்பு செயலாளர்கள் பி.தங்கமணி, டி.ஜெயக்குமார், சி.வி.சண்முகம், செ.செம்மலை, அ.அருணாசலம், மகளிரணி செயலாளர் பா.வளர்மதி ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். இக்குழு உடனான ஆலோசனை கூட்டம், சென்னை ராயப்பேட்டையில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது.
எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் அவர் கூறியதாவது: கள ஆய்வின் போது, மாவட்ட செயலாளர்களின் செயல்பாடு, கட்சி நிர்வாகிகளின் செயல்பாடு, தொகுதி வெற்றி நிலவரம், பொதுமக்கள் மற்றும் தொண்டர்களின் அதிருப்திக்கு உள்ளான நிர்வாகிகள், அதற்கான காரணம் உள்ளிட்டவை குறித்து விரிவாக விசாரித்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்.
அந்த அறிக்கை உண்மை தன்மையுடனும், வெளிப்படை தன்மையுடனும் இருக்க வேண்டும். மாவட்ட செயலாளர்கள் செயல்பாடு திருப்தி அளிக்கவில்லை என்றாலும் அதனை பாரபட்சமின்றி அறிக்கையில் குறிப்பிட வேண்டும். கள ஆய்வு குழு அளிக்கும் அறிக்கை மீது கட்சி உறுதியாக நடவடிக்கை எடுக்கும். இவ்வாறு பழனிசாமி கூறினார். இந்த ஆலோசனைக் கூட்டத்தில், எஸ்.பி.வேலுமணி தவிர்த்து குழுவில் உள்ள அனைவரும் இடம்பெற்று இருந்தனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 5 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 5 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |
-
தமிழக சட்டசபை தேர்தல் தேதி வரும் 15ம் தேதி வெளியாகிறது
09 Mar 2026சென்னை, வரும் 15-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார், தமிழகம் உள்ளிட்ட 5 மாநில தேர்தல் தேதியை அறிவிக்க இருப்பதாக கூறப்படுகிறது.
-
மத்திய அரசு நடைமுறைப்படுத்த விரும்பும் ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டம் நோயை விட கொடுமையானது: முதல்வர் மு.க.ஸ்டாலின் கடும் விமர்சனம்
09 Mar 2026சென்னை, மத்திய அரசு நடைமுறைப்படுத்த விரும்பும் ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டம் நோயை விட கொடுமையானது என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
-
பாராளுமன்ற மாநிலங்களவை தேர்தல்: 6 வேட்பாளர்களும் போட்டியின்றி தேர்வு
09 Mar 2026சென்னை, தமிழகத்தில் மாநிலங்களவை தேர்தலில் தி.மு.க. வேட்பாளர்கள் 4 பேர், அ.தி.மு.க.
-
மேற்கு ஆசிய போர் பதற்றம்: பாராளுமன்ற விவாதம் கோரி எதிர்க்கட்சிகள் ஆர்ப்பாட்டம்
09 Mar 2026புதுடெல்லி, மேற்கு ஆசியாவில் நடைபெற்று வரும் போர் குறித்தும், அதனால் இந்தியாவுக்கு ஏற்பட்டிருக்கும் பாதிப்புகள் குறித்தும் பாராளுமன்றத்தில் விவாதம் நடத்த வலியுறுத்தி எத
-
தமிழ்நாட்டில் தி.மு.க. ஆட்சி தொடர்ந்தால்தான் தமிழ் சமூகம் எதிர்பார்க்கும் முன்னேற்றம் கிடைக்கும் : திருச்சி தி.மு.க. மாநாட்டில முதல்வர் மு.கஸ்டாலின் பேச்சு
09 Mar 2026தமிழகத்தில் தி.மு.க. ஆட்சி தொடர்ந்தால்தான் தமிழ் சமூகம் எதிர்பார்க்கும் முன்னேற்றம் கிடைக்கும் என்று திருச்சி தி.மு.க. மாநாட்டில முதல்வர் மு.கஸ்டாலின் பேசினார்.
-
சவுதியில் இந்தியர் கொல்லப்பட்டதாக வெளியான தகவலில் உண்மையில்லை: இந்திய தூதரக அதிகாரி தகவல்
09 Mar 2026ரியாத், ஈரான் போர் அதிகரித்து வரும் நிலையில், சவுதி அரேபியாவில் 'ஏவுகணை தாக்குதலில்' ஒரு இந்தியர் இறந்ததாக வெளியான செய்திகளை ரியாத்தில் உள்ள இந்திய தூதரகம் நிராகரித்தது.
-
பராமரிப்பு சார்ந்த பொருளாதாரம் இந்திய இளைஞர்களுக்கு அதிக வேலை வாய்ப்பை அளிக்கிறது: பிரதமர் நரேந்திர மோடி பேச்சு
09 Mar 2026புதுடெல்லி, குழந்தைகளை பராமரித்தல், முதியோர்களை பராமரித்தல், சுகாதாரத்தை பராமரித்தல் உள்ளிட்ட பராமரிப்பு சார்ந்த பொருளாதாரம், இளைஞர்களுக்கு அதிக வேலை வாய்ப்பை அளிப்பதாக
-
தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல்: காங்., வேட்பாளர்களை தேர்வு செய்ய 4 பேர் சிறப்பு குழு நாளை ஆலோசனை
09 Mar 2026சென்னை, காங்கிரஸ் வேட்பாளர்களை தேர்வு செய்ய 4 பேர் கொண்ட சிறப்பு குழு நாளை சென்னையில் ஆலோசனை நடத்துகிறது.
-
கரூர் கூட்ட நெரிசல் வழக்கு: த.வெ.க. தலைவர் விஜய் நேரில் ஆஜராக சி.பி.ஐ. மீண்டும் சம்மன்
09 Mar 2026புதுடெல்லி, கரூர் கூட்ட நெரிசல் வழக்கில் த.வெ.க. தலைவர் விஜய்க்கு சி.பி.ஐ. மீண்டும் சம்மன் அனுப்பியுள்ளது. அதன்படி விஜய் இன்று (மார்ச் 10) டெல்லி சி.பி.ஐ.
-
கூடுதல் வரி விதிப்பதாக ட்ரம்ப் மிரட்டல்: அமெரிக்காவில் தென்கொரியா 29 லட்சம் கோடி ரூபாய் முதலீடு
09 Mar 2026சியோல், தென் கொரிய பொருட்கள் மீது 25 சதவீத கூடுதல் இறக்குமதி வரி விதிக்கப்போவதாக அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் விடுத்திருந்த மிரட்டல், தற்போது தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்ப
-
திருச்சி பஞ்சப்பூரில் இன்று நடைபெறும் என்.டி.ஏ சார்பில் பொதுக்கூட்டம்; பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்பு: இ.பி.எஸ். உள்ளிட்ட கூட்டணி கட்சி தலைவர்களும் பங்கேற்கின்றனர்
10 Mar 2026திருச்சி, பிரதமர் மோடி பங்கேற்கும் மாபெரும் பொதுக்கூட்டம் திருச்சி பஞ்சப்பூரில் இன்று (புதன் கிழமை) மாலை நடக்கிறது.
-
நாட்டில் 'எஸ்மா' சட்டத்தை அமல்படுத்திய மத்திய அரசு: எரிவாயு சிலிண்டர் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை பதுக்கினால் கடும் நடவடிக்கை
10 Mar 2026புதுடெல்லி, மத்திய கிழக்கில் நடைபெற்று வரும் போர் பதற்றத்தால் காரணமாக நாடு முழுவதும் எரிபொருள் தட்டுப்பாடு பிரச்சினையை சமாளிக்கவும், அத்தியாவசிய பொருட்கள் பதுக்கலை தடுக
-
நாடு முழுவதும் சிலிண்டர் தட்டுப்பாடு எதிரொலி: பிரதமர் மோடி உடனே பதவி விலக வேண்டும்: பார்லி., மக்களவையில் எதிர்க்கட்சிகள் கடும் அமளி
10 Mar 2026சென்னை, நாடு முழுவதும் எரிவாயு சிலிண்டர் தட்டுப்பாட்டை அடுத்து இந்த விவகாரத்தில் பிரதமர் மோடி உடனே பதவி விலக வேண்டும் என்று பாராளுமன்ற மக்களவையில் எதிர்க்கட்சிகள் அமளிய
-
தென் தமிழகத்தில் ஓரிரு இடங்களில் இன்று லேசான மழை பெய்யக்கூடும்: வானிலை ஆய்வு மையம் தகவல்
10 Mar 2026சென்னை, தென் தமிழகத்தில் ஓரிரு இடங்களில் இன்று லேசான மழை பெய்யக்கூடும் என்று தெரிவித்துள்ள சென்னை வானிலை ஆய்வு மையம், தமிழகத்தில் வரும் 16-ம் தேதி வரை மிதமான மழை பெய்ய
-
சர்வதேச விமான நிலையமாக மாறும் மதுரை விமான நிலையம்: மத்திய அமைச்சரவை ஒப்புதல்
10 Mar 2026புதுடெல்லி, மதுரை விமான நிலையத்தை சர்வதேச விமான நிலையமாக மேம்படுத்த மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளதாக மத்திய அமைச்சர் அஷ்விணி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார்.
-
தங்கம் விலை மீண்டும் உயர்வு
10 Mar 2026சென்னை, சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை செவ்வாய்க்கிழமை சவரனுக்கு ரூ.800 உயர்ந்து ரூ.1,20,400-க்கு விற்பனையானது.
-
வாக்காளர் பட்டியலில் இருந்து தகுதியுள்ள வாக்காளர்கள் பெயர்கள் நீக்கப்படாது: தலைமைத் தேர்தல் ஆணையர் உறுதி
10 Mar 2026கொல்கத்தா, தகுதிவாய்ந்த எந்தவொரு வாக்காளரின் பெயரும் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்படாது என தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் தெரிவித்துள்ளார்.
-
தமிழகம் முழுவதும் 4,219 மையங்களில் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு இன்று முதல் துவங்குகிறது: தனித்தேர்வர்கள் உள்பட 9 லட்சம் பேர் எழுதுகிறார்கள்
10 Mar 2026சென்னை, தமிழகம் முழுவதும் 4,219 மையங்களில் 8 லட்சத்து 82 ஆயிரத்து 806 மாணவ-மாணவிகள் மற்றும் தனித்தேர்வர்கள் 26 ஆயிரம் பேர் என மொத்தம் 9 லட்சம் பேர் எழுதும் பத்தாம் வகுப
-
தமிழ்நாட்டில் உரிய நேரத்தில் கேஸ் சிலிண்டர் கிடைக்க ஆவண செய்ய வேண்டும்: மத்திய அரசுக்கு இ.பி.எஸ். கோரிக்கை
10 Mar 2026சென்னை, தமிழகத்தில் ஏற்கெனவே சில மாவட்டங்களில் சிலிண்டர்கள் கிடைக்காததால் உணவகங்களுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
-
மத்திய கிழக்கள் அதிகரிக்கும் போர் பதற்றம்: தமிழ்நாட்டுக்கு ஏற்படும் பாதிப்புகள் குறித்து முதல்வர் அவசர ஆலோசனை
10 Mar 2026சென்னை, மத்திய கிழக்கள் அதிகரிக்கும் போர் பதற்றம் காரணமாக தமிழ்நாட்டுக்கு ஏற்படும் பாதிப்புகள் குறித்து நேற்று முதல்வர் மு.க.ஸ்டாலின் அவசர ஆலோசனை நடத்தினார்.


