எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
புதுடெல்லி, மத்திய கிழக்கில் நடைபெற்று வரும் போர் பதற்றத்தால் காரணமாக நாடு முழுவதும் எரிபொருள் தட்டுப்பாடு பிரச்சினையை சமாளிக்கவும், அத்தியாவசிய பொருட்கள் பதுக்கலை தடுக்கவும் அத்தியாவசிய பொருட்கள் சட்டத்தை (எஸ்மா) மத்திய அரசு அமல் படுத்தி உள்ளது. மேலும், எரிவாயு சிலிண்டரை பதுக்கினால் அத்தியாவசிய சேவைகள் பராமரிப்பு சட்டத்தின் கீழ் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுத்துள்ளது.
25 நாட்களாக...
ஈரான் - இஸ்ரேல் போர் காரணமாக எரிவாயு தட்டுப்பாடு அபாயம் ஏற்பட்டுள்ளதால், வீட்டு பயன்பாட்டு சமையல் எரிவாயு உற்பத்தியை அதிகரிக்க எண்ணெய் நிறுவனங்களுக்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. மேலும், சமையல் கியாஸ் தட்டுப்பாடு ஏற்படுவதை தடுக்க ஒரு சிலிண்டர் வைத்துள்ள குடும்பங்கள், முன்பதிவு செய்வதற்கான கால இடை வெளி 21 நாட்கள் என்று சமீபத்தில் நிர்ணயிக்கப்பட்டு இருந்தது. இந்நிலையில், அதை 25 நாட்கள் என்று மத்திய அரசு தற்போது உயர்த்தி உள்ளது.
முன்னுரிமை அளிக்க...
மேலும் சிலிண்டர் விநியோகத்தில் வீட்டு உபயோகத்துக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என்றும், இறக்குமதி செய்யப்படும் எரிவாயுவை மருத்துவம், கல்வி போன்றவற்றுக்கு மட்டுமே வழங்க வேண்டும் என்றும், ஓட்டல் உள்ளிட்ட வணிக பயன்பாட்டு சிலிண்டர் வழங்குவதற்கான வழிமுறை குறித்து ஆய்வுசெய்ய குழு அமைக்கப்பட்டுள்ளது என்றும் தெரிவித்திருந்தது.
முடங்கும் சூழல்...
இந்த சூழலில் வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டருக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால், ஓட்டல் சேவைகள் பெருமளவில் முடங்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. பல முன்னணி ஓட்டல்களிலும் (நேற்று) ஒரு நாளைக்கு மட்டுமே கையிருப்பு உள்ளதாக கூறப்படுகிறது. உடனடியாக விநியோகம் சீரடையாவிட்டால், இன்று முதல் பெரும்பாலான களை மூட வேண்டிய நிலைக்கு தள்ளப்படுவோம் என அதன் உரிமையாளர்கள் அச்சம் தெரிவித்துள்ளனர்.
சங்கம் கோரிக்கை...
பல டீலர்களும் நேற்று முன்தினம் முதலே உணவு விநியோகத்தை நிறுத்திவிட்டதாக ஓட்டல் உரிமையாளர்கள் கவலை தெரிவிக்கின்றனர். இதுதொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்கக்கோரி பிரதமர் மோடி மற்றும் முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு சென்னை ஓட்டல்கள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது. முன்னதாக கர்நாடகாவில் ஏற்கனவே நேற்று ஓட்டல்கள் இயங்காது என அறிவிக்கப்பட்டிருந்தது. இதன்படி அங்கு நூற்றுக்கணக்கான உணவகங்கள் மூடப்பட்டுள்ளன. அங்குள்ள இந்திரா நகர், கோரமங்களா, ஒயிட்பீல்டு பகுதிகளில் உணவகங்கள் முழுவதுமாக மூடப்பட்டுள்ளது. இதனால் ஐடி ஊழியர்கள், மாணவர்கள், வெளிமாநில தொழிலாளர்கள் உள்ளிட்டோர் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
20 நாட்களுக்கு...
இதனிடையே தமிழகத்தில் அடுத்த 20 நாட்களுக்கு தேவையான வீட்டு சிலிண்டர் கையிருப்பு உள்ளதாக தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது. இந்நிலையில் எரிபொருள் தட்டுப்பாடு பிரச்சினையை சமாளிக்க அத்தியாவசிய பொருட்கள் சட்டத்தை மத்திய அரசு அமல் படுத்தி உள்ளது. இதன்படி பெட்ரோலியம் மற்றும் பெட்ரோலியப் பொருட்கள் மற்றும் இயற்கை எரிவாயுவின் கிடைக்கும் தன்மை, வழங்கல் மற்றும் சமமான விநியோகத்தை ஒழுங்குபடுத்துவதற்காக மத்திய அரசு அத்தியாவசியப் பொருட்கள் சட்டம், 1955 ஐ செயல்படுத்தி உள்ளது.
அத்தியாவசியப் பொருட்கள் சட்டத்தை (ECA) மத்திய அரசு அமல்படுத்தினாலும் மாநில அரசுகள் அதனை செயல்படுத்தும் அதிகாரம் பெற்றுள்ளன. அத்தியாவசிய பொருட்கள் சட்டம் அமலானதால் அனைத்து எண்ணெய் கம்பெனிகளும் எல்.பி.ஜி. உற்பத்தியை அதிகரிக்க வேண்டும். எல்.பி.ஜி. தயாரிக்க பயன்படும் ப்ரோப்பேன் மற்றும் பியூட்டேன் ஆகியவற்றை பெட்ரோ கெமிக்கல் தயாரிப்புகளுக்கு பயன்படுத்த தடை விதிக்கப்படுகிறது. உற்பத்தி செய்யப்படும் எல்.பி.ஜி. இன்டியன் ஆயில் கார்பரேசன், பாரத் பெட்ரோலியம் பிபிசிஎல், ஹிந்துஸ்தான் பெ்டரோலியம் - எச்.பி.சி.எல். ஆகிய அரசு எண்ணெய் நிறுவனங்களுக்கு மட்டுமே வழங்க வேண்டும்.
மத்திய அரசு எச்சரிக்கை...
எம்.பி.ஜி. வீட்டு சமையல் பயன்பாட்டிற்கே முன்னுரிமை வழங்கப்பட வேண்டும். உத்தரவை மீறினால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று மத்திய அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது. சமையல் எரிவாயு சிலிண்டர் விநியோகத்தை சீரமைக்க மத்திய அரசு இந்த நடவடிக்கை எடுத்துள்ளது. இதன்படி சிலிண்டரை பதுக்குதல், கள்ளச்சந்தையில் விற்பனை செய்தலை தடுக்கும் வகையில் அத்தியாவசியப் பொருட்கள் சட்டம் கொண்டுவரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 5 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 5 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |
-
தமிழக சட்டசபை தேர்தல் தேதி வரும் 15ம் தேதி வெளியாகிறது
09 Mar 2026சென்னை, வரும் 15-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார், தமிழகம் உள்ளிட்ட 5 மாநில தேர்தல் தேதியை அறிவிக்க இருப்பதாக கூறப்படுகிறது.
-
மத்திய அரசு நடைமுறைப்படுத்த விரும்பும் ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டம் நோயை விட கொடுமையானது: முதல்வர் மு.க.ஸ்டாலின் கடும் விமர்சனம்
09 Mar 2026சென்னை, மத்திய அரசு நடைமுறைப்படுத்த விரும்பும் ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டம் நோயை விட கொடுமையானது என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
-
பாராளுமன்ற மாநிலங்களவை தேர்தல்: 6 வேட்பாளர்களும் போட்டியின்றி தேர்வு
09 Mar 2026சென்னை, தமிழகத்தில் மாநிலங்களவை தேர்தலில் தி.மு.க. வேட்பாளர்கள் 4 பேர், அ.தி.மு.க.
-
தமிழ்நாட்டில் தி.மு.க. ஆட்சி தொடர்ந்தால்தான் தமிழ் சமூகம் எதிர்பார்க்கும் முன்னேற்றம் கிடைக்கும் : திருச்சி தி.மு.க. மாநாட்டில முதல்வர் மு.கஸ்டாலின் பேச்சு
09 Mar 2026தமிழகத்தில் தி.மு.க. ஆட்சி தொடர்ந்தால்தான் தமிழ் சமூகம் எதிர்பார்க்கும் முன்னேற்றம் கிடைக்கும் என்று திருச்சி தி.மு.க. மாநாட்டில முதல்வர் மு.கஸ்டாலின் பேசினார்.
-
மேற்கு ஆசிய போர் பதற்றம்: பாராளுமன்ற விவாதம் கோரி எதிர்க்கட்சிகள் ஆர்ப்பாட்டம்
09 Mar 2026புதுடெல்லி, மேற்கு ஆசியாவில் நடைபெற்று வரும் போர் குறித்தும், அதனால் இந்தியாவுக்கு ஏற்பட்டிருக்கும் பாதிப்புகள் குறித்தும் பாராளுமன்றத்தில் விவாதம் நடத்த வலியுறுத்தி எத
-
பராமரிப்பு சார்ந்த பொருளாதாரம் இந்திய இளைஞர்களுக்கு அதிக வேலை வாய்ப்பை அளிக்கிறது: பிரதமர் நரேந்திர மோடி பேச்சு
09 Mar 2026புதுடெல்லி, குழந்தைகளை பராமரித்தல், முதியோர்களை பராமரித்தல், சுகாதாரத்தை பராமரித்தல் உள்ளிட்ட பராமரிப்பு சார்ந்த பொருளாதாரம், இளைஞர்களுக்கு அதிக வேலை வாய்ப்பை அளிப்பதாக
-
கரூர் கூட்ட நெரிசல் வழக்கு: த.வெ.க. தலைவர் விஜய் நேரில் ஆஜராக சி.பி.ஐ. மீண்டும் சம்மன்
09 Mar 2026புதுடெல்லி, கரூர் கூட்ட நெரிசல் வழக்கில் த.வெ.க. தலைவர் விஜய்க்கு சி.பி.ஐ. மீண்டும் சம்மன் அனுப்பியுள்ளது. அதன்படி விஜய் இன்று (மார்ச் 10) டெல்லி சி.பி.ஐ.
-
திருச்சி பஞ்சப்பூரில் இன்று நடைபெறும் என்.டி.ஏ சார்பில் பொதுக்கூட்டம்; பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்பு: இ.பி.எஸ். உள்ளிட்ட கூட்டணி கட்சி தலைவர்களும் பங்கேற்கின்றனர்
10 Mar 2026திருச்சி, பிரதமர் மோடி பங்கேற்கும் மாபெரும் பொதுக்கூட்டம் திருச்சி பஞ்சப்பூரில் இன்று (புதன் கிழமை) மாலை நடக்கிறது.
-
தங்கம் விலை மீண்டும் உயர்வு
10 Mar 2026சென்னை, சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை செவ்வாய்க்கிழமை சவரனுக்கு ரூ.800 உயர்ந்து ரூ.1,20,400-க்கு விற்பனையானது.
-
சர்வதேச விமான நிலையமாக மாறும் மதுரை விமான நிலையம்: மத்திய அமைச்சரவை ஒப்புதல்
10 Mar 2026புதுடெல்லி, மதுரை விமான நிலையத்தை சர்வதேச விமான நிலையமாக மேம்படுத்த மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளதாக மத்திய அமைச்சர் அஷ்விணி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார்.
-
இலங்கையில் பெட்ரோல், டீசல் விலை திடீர் உயர்வு
10 Mar 2026கொழும்பு, இலங்கையில் நேற்று நள்ளிரவு முதல் பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்பட்டுள்ளது.
-
தென் தமிழகத்தில் ஓரிரு இடங்களில் இன்று லேசான மழை பெய்யக்கூடும்: வானிலை ஆய்வு மையம் தகவல்
10 Mar 2026சென்னை, தென் தமிழகத்தில் ஓரிரு இடங்களில் இன்று லேசான மழை பெய்யக்கூடும் என்று தெரிவித்துள்ள சென்னை வானிலை ஆய்வு மையம், தமிழகத்தில் வரும் 16-ம் தேதி வரை மிதமான மழை பெய்ய
-
நாட்டில் 'எஸ்மா' சட்டத்தை அமல்படுத்திய மத்திய அரசு: எரிவாயு சிலிண்டர் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை பதுக்கினால் கடும் நடவடிக்கை
10 Mar 2026புதுடெல்லி, மத்திய கிழக்கில் நடைபெற்று வரும் போர் பதற்றத்தால் காரணமாக நாடு முழுவதும் எரிபொருள் தட்டுப்பாடு பிரச்சினையை சமாளிக்கவும், அத்தியாவசிய பொருட்கள் பதுக்கலை தடுக
-
ராமேஸ்வரம்-மங்களூரு எக்ஸ்பிரஸ் உள்பட தமிழ்நாட்டிற்கு 5 புதிய ரயில் சேவைகள் இன்று தொடக்கம் : பிரதமர் நரேந்திர மோடி துவக்கி வைக்கிறார்
10 Mar 2026திருச்சி, நெல்லை-மங்களூரு எக்ஸ்பிரஸ், ராமேஸ்வரம்- மங்களூரு எக்ஸ்பிரஸ் உள்ளிட்ட தமிழ்நாட்டிற்கான 5 புதிய ரெயில் சேவைகளை பிரதமர் மோடி இன்று தொடங்கி வைக்க உள்ளார்.
-
கோவையில் ஜி.டி.நாயுடுவின் திருவுருவ சிலை: மெரினாவில் ரூ.1.43 கோடி மதிப்பில் அமைக்கப்பட்டுள்ள கல்விச்சிலை: முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்
10 Mar 2026சென்னை, கோவையில் ஜி.டி.நாயுடுவின் திருவுருவ சிலை மற்றும் மெரினாவில் ரூ.1.43 கோடி மதிப்பில் அமைக்கப்பட்டுள்ள கல்விச்சிலையை முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.
-
மத்திய கிழக்கள் அதிகரிக்கும் போர் பதற்றம்: தமிழ்நாட்டுக்கு ஏற்படும் பாதிப்புகள் குறித்து முதல்வர் அவசர ஆலோசனை
10 Mar 2026சென்னை, மத்திய கிழக்கள் அதிகரிக்கும் போர் பதற்றம் காரணமாக தமிழ்நாட்டுக்கு ஏற்படும் பாதிப்புகள் குறித்து நேற்று முதல்வர் மு.க.ஸ்டாலின் அவசர ஆலோசனை நடத்தினார்.
-
நாடு முழுவதும் சிலிண்டர் தட்டுப்பாடு எதிரொலி: பிரதமர் மோடி உடனே பதவி விலக வேண்டும்: பார்லி., மக்களவையில் எதிர்க்கட்சிகள் கடும் அமளி
10 Mar 2026சென்னை, நாடு முழுவதும் எரிவாயு சிலிண்டர் தட்டுப்பாட்டை அடுத்து இந்த விவகாரத்தில் பிரதமர் மோடி உடனே பதவி விலக வேண்டும் என்று பாராளுமன்ற மக்களவையில் எதிர்க்கட்சிகள் அமளிய
-
தமிழகம் முழுவதும் 4,219 மையங்களில் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு இன்று முதல் துவங்குகிறது: தனித்தேர்வர்கள் உள்பட 9 லட்சம் பேர் எழுதுகிறார்கள்
10 Mar 2026சென்னை, தமிழகம் முழுவதும் 4,219 மையங்களில் 8 லட்சத்து 82 ஆயிரத்து 806 மாணவ-மாணவிகள் மற்றும் தனித்தேர்வர்கள் 26 ஆயிரம் பேர் என மொத்தம் 9 லட்சம் பேர் எழுதும் பத்தாம் வகுப
-
வாக்காளர் பட்டியலில் இருந்து தகுதியுள்ள வாக்காளர்கள் பெயர்கள் நீக்கப்படாது: தலைமைத் தேர்தல் ஆணையர் உறுதி
10 Mar 2026கொல்கத்தா, தகுதிவாய்ந்த எந்தவொரு வாக்காளரின் பெயரும் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்படாது என தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் தெரிவித்துள்ளார்.
-
தமிழ்நாட்டில் உரிய நேரத்தில் கேஸ் சிலிண்டர் கிடைக்க ஆவண செய்ய வேண்டும்: மத்திய அரசுக்கு இ.பி.எஸ். கோரிக்கை
10 Mar 2026சென்னை, தமிழகத்தில் ஏற்கெனவே சில மாவட்டங்களில் சிலிண்டர்கள் கிடைக்காததால் உணவகங்களுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
-
ஹோர்முஸ் நீரிணை விவகாரம்: ஈரான் மீது 20 மடங்கு கூடுதலாக தாக்குதல் நடத்தப்படும்: ட்ரம்ப்
10 Mar 2026வாஷிங்டன், ஹோர்முஸ் நீரிணை பகுதியில் எண்ணெய் போக்குவரத்தை முடக்க நினைத்தால் இதுவரை தாக்கப்பட்டதைவிட ஈரானை 20 மடங்கு அதிகமாக தாக்குவோம் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்
-
தமிழ்நாட்டில் சமையல் எரிவாயு சிலிண்டர் பிரச்சினை: பொதுமக்கள் பாதிக்கப்படாமல் இருப்பதை உறுதி செய்யுங்கள்: பிரதமர் மோடிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம்
10 Mar 2026சென்னை, தமிழ்நாட்டில் எரிவாயு தட்டுப்பாட்டினால் பொதுமக்களும் வணிக நிறுவனங்களும், தமிழ்நாட்டின் குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழிற்சாலைகளும் எந்த விதத்திலும் பாதிக்கப்பட
-
பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு: பாகிஸ்தானில் பள்ளிகளுக்கு விடுமுறை
10 Mar 2026லாகூர், பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு காரணமாக பாகிஸ்தானில் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
-
த.வெ.க. சார்பில் விருப்பமனு: 60 பேரிடம் விஜய் நேர்காணல்
10 Mar 2026சென்னை, தமிழக சட்டசபை தேர்தலில் போட்டியிட த.வெ.க சார்பில் போட்டியிட விருப்ப மனு அளித்த 60 பேரிம் விஜய் நேற்று நேர்காணல் நடத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது.
-
கரூர் கூட்ட நெரிசல் விவகாரம்: வரும் 17-ம் தேதி சி.பி.ஐ விசாரணைக்கு நேரில் ஆஜராகிறேன்: செந்தில் பாலாஜி
10 Mar 2026கரூர், கரூர் கூட்ட நெரிசல் விவகாரம் தொர்பாக வருகின்ற மார்ச் 17 அன்று சி.பி.ஐ அனுப்பிய சம்மனின் அடிப்படையில், நேரில் சென்று உரிய விளக்கங்களை அளிக்கவுள்ளதாக தமிழக முன்னாள


