முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வாக்காளர் பட்டியலில் இருந்து தகுதியுள்ள வாக்காளர்கள் பெயர்கள் நீக்கப்படாது: தலைமைத் தேர்தல் ஆணையர் உறுதி

செவ்வாய்க்கிழமை, 10 மார்ச் 2026      இந்தியா
Election-Commision 2023-04-20

கொல்கத்தா, தகுதிவாய்ந்த எந்தவொரு வாக்காளரின் பெயரும் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்படாது என தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் தெரிவித்துள்ளார்.

மேற்கு வங்கத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் விரைவில் நடைபெறவுள்ளது. இதுதொடர்பாக நேற்று செய்தியாளர்களிடம் பேசிய தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார், “மேற்கு வங்க மக்கள் ஜனநாயகத்தின் மீது எப்போதும் நம்பிக்கை கொண்டுள்ளனர். இங்கு நம்பிக்கையான, சுதந்திரமான மற்றும் அமைதியான முறையில் தேர்தலை நடத்துவதே எங்களின் இலக்கு. தகுதியுள்ள வாக்காளர் ஒவ்வொருவரும் அவர்களின் வாக்குகளைப் பதிவு செய்வதற்கான உரிமை உள்ளது. தகுதிவாய்ந்தவர்கள் எவரின் வாக்குகளும் நீக்கப்படாது.

மேற்கு வங்கத்தில் 80,000 வாக்குச்சாவடிகள் அமைந்துள்ள நிலையில் அவற்றில் 61,000 வாக்குச்சாவடிகள் கிராமப் புறங்களில் அமைந்துள்ளதாக அவர் குறிப்பிட்டார். மேலும், வெளிப்படைத்தன்மையை மேம்படுத்தும் விதமாக அனைத்து வாக்குச்சாவடிகளிலும் 100 சதவீத நேரடி இணைய ஒளிபரப்பை தேர்தல் ஆணையம் செயல்படுத்தும் என்றும் அவர் தெரிவித்தார். இந்த நிலையில், தலைமைத் தேர்தல் ஆணையரை நீக்க எதிர்க்கட்சிகள் முன்மொழிவு ஒன்றை பாராளுமன்றத்தில் தாக்கல் செய்ய இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 9 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 11 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 11 months ago
View all comments

வாசகர் கருத்து