எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
மும்பை, ஆக. 25 - மும்பையில் இளம் பத்திரிக்கையாளரை பலாத்காரம் செய்துவிட்டு சாவகாசமாக வீட்டில் போய் பாவ்பாஜி சாப்பிட்டுள்ளான் குற்றவாளி சந்த். மும்பையில் ஆங்கிலப் பத்திரிகை ஒன்றில் புகைப்பட நிருபராகப் பணிபுரிந்து வந்த 23 வயது பெண், கடந்த வியாழக்கிழமை மாலை தனது ஆண் நண்பர் ஒருவருடன் புகைப்படம் எடுப்பதற்காக மும்பை லோயர் பேரல் பகுதியில் ஆள் அரவமின்றி பாழடைந்து கிடக்கும் சக்தி மில்ஸ் வளாகத்துக்கு சென்றுள்ளார். அங்கு 5 பேர் கொண்ட கும்பல் அவர்களை வழி மறித்தது. அப்பெண்ணின் நண்பரை தாக்கி, கட்டிப் போட்டது. பின்னர் அந்த 5 பேரும் இளம் பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர்.
மாலை 6.30 மணியளவில் நிகழ்ந்த இந்த சம்பவம் இரவு 8.30 மணியளவுக்கே போலீசாருக்கு தெரியவந்தது. முன்னதாக 8 மணியளவில் அப்பெண் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.
இந்த சம்பவத்தில் தொடர்புடையவர்களில் ஒருவரான சந்த் அப்துல் என்பவனை மும்பை போலீஸார் கைது செய்துள்ளனர். அவனிடம் மேற்கொண்ட விசாரணையில் இளம்பெண்ணை பலாத்காரம் செய்து விட்டு வீட்டில் போய் சாவகாசமாக வீட்டிற்குப் போய் சாப்பிட்டது தெரியவந்துள்ளது.
ஜெய் பவானி நகரில் பாட்டியுடன் வசித்து வந்த சந்த் அப்துல்க்கு பெற்றோர்கள் கிடையாது. வியாழனன்று மாலை 5.30 மணியளவில் அவனது நண்பர்கள் போன் செய்து சந்த்திற்கு அழைப்பு விடுத்துள்ளனர். உடனே கிளம்பி போன அவன் சில மணிநேரத்தில் திரும்பி வந்து விட்டதாக பாட்டி கூறியுள்ளார். பலமுறை கெட்ட நண்பர்களுடன் சேரவேண்டாம் என்று எச்சரித்தும் கேட்காமல் அவன் இவ்வாறு செய்து விட்டதாக பாட்டி கூறினார். இரவு 10 மணிக்கு வீட்டிற்கு வரும் போது பாவ்பாஜி வாங்கிக் கொண்டு வந்து சாப்பிட்டு விட்டு உறங்க போய் விட்டான் என்று அவனது பாட்டி கூறியுள்ளார்.
சந்த்திற்கு இரண்டு அண்ணன்களும், இரண்டு சகோதரிகளும் உள்ளனர். 9 ம் வகுப்பு வரை மட்டுமே படித்துள்ள சந்த் நிலைமையை நினைத்து அவனது பாட்டி சர்னாபாய் கவலைப்படுகிறார். இளம் வயதிலேயே அவனது பெற்றோர்கள் மரணமடைந்துவிட்ட நிலையில் அவனை வளர்க்க சிரமப்பட்டதாக கூறுகிறார் பாட்டி. கெட்ட நண்பர்களின் சவகாசம்தான் இந்த அளவிற்கு அவனை செய்ய தூண்டிவிட்டதாக கூறுகிறார் பாட்டி.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 3 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 3 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 4 months ago |


