Idhayam Matrimony

மெக்சிகோ, கனடாவுக்கு கூடுதல் வரி விதித்தால் உறவு பாதிக்கும் டிரம்புக்கு பைடன் அறிவுறுத்தல்

வெள்ளிக்கிழமை, 29 நவம்பர் 2024      உலகம்
America 2024--11-29

Source: provided

 

வாஷிங்டன்: மெக்சிகோ, கனடாவுக்கு கூடுதல் வரி விதித்தால், உறவு பாதிக்கும் என அமெரிக்கா அதிபர் ஜோ பைடன் டிரம்புக்கு அறிவுறுத்தி உள்ளார்.

 ஜனவரி மாதம் 20-ம் தேதி அமெரிக்கா அதிபராக பொறுப்பேற்ற முதல் நாளில், கனடா, மெக்சிகோ, சீனா ஆகிய 3 நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு கூடுதல் வரி விதிப்பதற்கான ஆணையில் கையெழுத்து விடுவேன் என அமெரிக்கா அதிபராக தேர்வு செய்யப்பட்டுள்ள  டிரம்ப் அறிவித்துள்ளார். 

இந்த நிலையில் நிருபர்களை சந்தித்த அமெரிக்கா அதிபர் ஜோ பைடன் கூறியதாவது,

மெக்சிகோ மற்றும் கனடா மீதான கூடுதல் வரி விதிப்பு முறையை, டொனால்டு டிரம்ப் மறுபரிசீலனை செய்வார் என நான் நம்புகிறேன். இது நட்பு நாடுகளுக்கு இடையேயான உறவை பாதிக்கும். இதனால் பாதிப்பு வரும் என்று நான் நினைக்கிறேன். 

அமெரிக்காவில் அசாதாரண சூழ்நிலை உள்ளது. பசிபிக் பெருங்கடல், அட்லாண்டிக் பெருங்கடல் மற்றும் இரண்டு நட்பு நாடுகளால் சூழப்பட்டுள்ளோம். நாம் செய்ய வேண்டியது, மெக்சிகோ, கனடா நாடுகளுடன் நமது உறவை வலுப்படுத்த வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 10 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 10 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 12 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 12 months ago
View all comments

வாசகர் கருத்து