முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கனமழையால் பரசன் ஏரியில் உடைப்பு: கிருஷ்ணகிரி அருகே வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட வாகனங்கள்

திங்கட்கிழமை, 2 டிசம்பர் 2024      தமிழகம்
Krishnagiri 2024-12-02

Source: provided

கிருஷ்ணகிரி: கனமழை காரணமாக பரசன் ஏரியில் ஏற்பட்ட உடைப்பால் கிருஷ்ணகிரி அருகே வெள்ளத்தில் வாகனங்கள் அடித்து செல்லப்பட்டன. இது தொடர்பான வீடியோ காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.

வங்கக்கடலில் உருவான ஃபெஞ்சல் புயல் 7-ம் தேதி இரவு 10.30 மணி முதல் 11.30 மணியளவில் மரக்காணம் - புதுச்சேரி இடயே கரையை கடந்தது. இந்த புயல் கரையை கடக்கும்போது மெதுவாக கடந்ததால் கடலூர், விழுப்புரம், பாண்டிச்சேரி, திருவண்ணாமலை உள்ளிட்ட பகுதியில் மழை வெளுத்து வாங்கியது. தொடர்ந்து, ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவிழந்தநிலையில் உள்மாவட்டங்களில் கனமழை பெய்தது.

கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரையில் 503 மி.மீ, தருமபுரி அரூரில் 331 மி.மீ மழை பதிவாகி உள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கனமழை காரணமாக, உள்ள ஏரி, குளங்கள் அனைத்தும் நிரம்பி உள்ளன. இந்தநிலையில், ஏரிகள், ஆறுகளில் இருந்து உபரி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. இதனால் பல இடங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

இந்தநிலையில், ஊத்தங்கரை பஸ் ஸ்டாண்ட் அருகே பரசன் ஏரி உள்ளது. அந்த ஏரியில் உடைப்பு ஏற்பட்டு பேருந்து நிலையத்தை வெள்ளம் சூழ்ந்தது. ஏரி நிரம்பி வெளியேறிய வெள்ள நீர், பஸ் ஸ்டாண்ட் அருகே நிறுத்தப்பட்டிருந்த வாகனங்களை அடித்துச் சென்றது. பத்துக்கும் மேற்பட்ட சுற்றுலா வாகனங்கள், கார் ஆகியவை இழுத்துச் செல்லப்படும் காட்சி வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

 

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 9 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 11 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 11 months ago
View all comments

வாசகர் கருத்து