முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வங்கதேச படுகொலைகளுக்கு இடைக்கால அரசின் தலைவர்தான் காரணம்: ஷேக் ஹசீனா

செவ்வாய்க்கிழமை, 3 டிசம்பர் 2024      உலகம்
Hasina 2024-12-03

Source: provided

 

டாக்கா: வங்கதேசத்தில் நடந்த படுகொலைகளுக்கு இடைக்கால அரசின் தலைவர் முகமது யூனிஸ்தான் காரணம் என்று ஷேக் ஹசீனா குற்றஞ்சாட்டியுள்ளார்.

வங்கதேசத்தில் இடஒதுக்கீட்டுக்கு எதிராக மாணவர்கள் நடத்திய போராட்டம் வன்முறையாக மாறியது. பல இடங்களில் மாணவர்களுக்கும், ஆளும் அவாமி லீக் கட்சியினருக்கும் இடையே மோதல் வெடித்தது.

போராட்டத்தை ஒடுக்குவதற்காக போலீசார் துப்பாக்கிச் சூடு நடத்தினர். இந்த வன்முறை போராட்டங்களில் மாணவர்கள், காவல்துறையினர், அப்பாவி பொதுமக்கள் என ஏராளமானோர் கொல்லப்பட்டனர்.

பிரதமரின் இல்லத்தை போராட்டக் குழுவினர் முற்றுகையிட்டதால் பெரும் பதற்றம் உருவானது. இவ்வாறு அசாதாரண சூழல் நிலவியதையடுத்து, கடந்த ஆகஸ்ட் 5-ம் தேதி பிரதமர் ஷேக் ஹசீனா பதவியை ராஜினாமா செய்து விட்டு இந்தியாவில் தஞ்சம் புகுந்தார்.

வங்கதேசத்தில் அவாமி லீக் அரசாங்கம் கவிழ்ந்ததையடுத்து, முகமது யூனுஸ் தலைமையிலான இடைக்கால அரசு பொறுப்பேற்றது. இடைக்கால அரசு பொறுப்பேற்ற பிறகு நாட்டில் சிறுபான்மையினருக்கு எதிரான வன்முறை அதிகரிக்க தொடங்கியது.

குறிப்பாக இந்துக்கள் மீது தொடர்ந்து தாக்குதல் நடத்தப்படுகிறது. சமீபத்தில் இந்து அமைப்பின் தலைவரும், இஸ்கான் முன்னாள் துறவியுமான சின்மய் கிருஷ்ண தாஸ் தேசத்துரோக வழக்கில் கைது செய்யப்பட்ட சம்பவம் நாட்டில் பதற்றத்தை மேலும் அதிகரித்துள்ளது.

இந்நிலையில், நியூயார்க்கில் நடைபெற்ற கட்சி நிகழ்ச்சியில் காணொலி வாயிலாக ஷேக் ஹசீனா உரையாற்றினார். அப்போது, ஷேக் ஹசீனா பேசியதாவது:-

வங்கதேசத்தில் நடந்த படுகொலைகளுக்காக என் மீது  குற்றம்சாட்டப்பட்டுள்ளது. உண்மையில், முகமது யூனுஸ்தான் மாணவர் ஒருங்கிணைப்பாளர்களுடன் இணைந்து திட்டமிட்டு படுகொலைகளை நிகழ்த்தி உள்ளார்.  அவர்தான் மூளையாக இருந்தார்.

வங்கதேசத்தில் இதுபோன்ற உயிரிழப்புகள் தொடர்ந்தால், அரசாங்கம் நீடிக்காது என்று லண்டனைச் சேர்ந்த தாரிக் ரஹ்மான் கூட கூறியுள்ளார். தற்போது  ஆசிரியர்கள், காவல்துறை என அனைவரும் தாக்கப்பட்டு கொல்லப்படுகிறார்கள்.

இந்துக்கள், பவுத்தர்கள், கிறிஸ்தவர்கள் குறிவைத்து தாக்கப்படுகிறார்கள். தேவாலயங்கள் மற்றும் பல கோவில்கள் தாக்கப்பட்டுள்ளன. வங்கதேசத்தில் சிறுபான்மையினர் குறிவைக்கப்படுவது ஏன்?.

நான் படுகொலையை விரும்பவில்லை. நான் ஆட்சியைப் பிடிக்க நினைத்திருந்தால் படுகொலை நடந்திருக்கும். மக்கள் கண்மூடித்தனமாக கொல்லப்படும்போது, நான் வெளியேற வேண்டும் என்று முடிவு செய்தேன்.

அன்று எனது பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த வீரர்கள் துப்பாக்கிச் சூடு நடத்தியிருந்தால், கானா பவனில் (பிரதமர் இல்லம்) பலர் இறந்திருப்பார்கள். அதை நான் விரும்பவில்லை. அதனால் நாட்டைவிட்டு வெளியேறினேன். இவ்வாறு அவர் பேசினார்.  

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 9 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 11 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 11 months ago
View all comments

வாசகர் கருத்து