எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Source: provided
புது டெல்லி: 2020-ம் ஆண்டுக்கு பிறகு, சமீபத்தில் இந்தியா - சீனா இடையிலான உறவு மேம்பட்டு உள்ளது என லோக்சபாவில் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் கூறினார்.
கடந்த 2020-ம் ஆண்டு லடாக் எல்லையில் இந்தியா- சீன வீரர்கள் இடையே மோதல் ஏற்பட்டது. அங்கு இரு நாட்டு ராணுவ வீரர்களும் குவிக்கப்பட்டனர். இதனால், இரு நாடுகளுக்கு இடையிலான உறவில் பதற்றம் நிலவிவந்தது. தொடர்ந்து இரு நாட்டு அதிகாரிகளும் பேச்சு நடத்தி வந்த நிலையில், சுமூக முடிவு ஏற்பட்டு வீரர்கள் வாபஸ் பெறப்பட்டனர்.
இந்நிலையில் இரு நாடுகளுக்கு இடையிலான உறவு குறித்து லோக்சபாவில் மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் விளக்கம் அளித்தார். அப்போது அவர் கூறியதாவது,
சமீபத்தில் இந்தியா - சீனா இடையிலான உறவு மேம்பட்டு உள்ளது.தூதரக ரீதியில் நடந்து வந்த தொடர் பேச்சுவார்த்தை காரணமாக, நமது உறவில் லேசான முன்னேற்றம் ஏற்பட்டு உள்ளது. எல்லைப் பிரச்னைக்கு நேர்மையான, சுமூகமான மற்றும் இரு தரப்பும் சுமூகமாக ஏற்றுக் கொள்ளும் முடிவை எடுப்பதற்கு தொடர்ந்து பேச்சுவார்த்தையில் ஈடுபட இந்தியா உறுதிபூண்டுள்ளது.
எல்லையில் சீனப் படைகள் குவிக்கப்பட்ட காலத்தில், கடினமான சூழ்நிலையிலும், கொரோனா சவாலுக்கு மத்தியிலும் இந்திய ஆயுதப்படையினர் உடனடியாகவும், விரைவாகவும் பணியாற்றினர். இவ்வாறு அவர் கூறினார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 5 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 5 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |


